இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம். - தமிழர்களின் சிந்தனை களம் இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம். - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, May 11, 2014

    இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம்.

     If fresh blood in the body millamal tired body, fever, stomach flu, can cause breathing like kolarukal.
    உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.  அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக  வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

    நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை  தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.  தினசரி இரவு  அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

    பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள  இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

    முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம்  விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

    தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால்  இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால்  இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: இரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிடலாம். Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top