மூல நோய்க்கு சிகிச்சைகள் - தமிழர்களின் சிந்தனை களம் மூல நோய்க்கு சிகிச்சைகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, October 20, 2010

    மூல நோய்க்கு சிகிச்சைகள்

    மூலரோகசிகிச்சை

    சிகிச்சை விதி:- மூலவியாதி உண்டாயிருந்தால் அதைநிவர்த்திசெய்ய ஒளஷதம், ஷாரம், சஸ்திரம், அக்னி என்று நான்கு வித சிகிச்சைகள் உண்டு. இவைகளில் தேகத்தில் பலாபலத்தை அறிந்து தேகத்திற்கு தக்கவாறு ஏதாகிலும் ஒன்றை செய்துகொள்ளவேண்டியது.

    ஆனால் மூலவியாதிகளுக்கு ஓளஷத சிகிச்சை தான் மேலானதென்று பூர்வாசிரியர் தங்கள் சாஸ்திரங்களில் புகட்டி இருக்கிறார்கள்.

    வாதத்தினால் உண்டாகும் மூலவியாதிக்கு சிநேஹகிரியை சுவேதஹிரியை முதலியது செய்யலாம்.

    பித்தத்தினால் உண்டாகும் மூலவியாதிக்கு விரேசன சிகிச்சைகள் முதலியது செய்யலாம்.

    கபத்தினால் உண்டாகும் மூலவியாதிக்கு வமனம் முதலிய கிரிகைகள் செய்யலாம்.

    தொந்த சந்நிபாதம், இவைகளினால் உண்டாகும் மூலவியாதிக்கு சகலகிரிகைகளையும் அந்தந்த வியாதியில் நிலமைக்கு தக்கவாறு செய்ய வேண்டியது.

    ரத்தசந்நிபாத மூலவியாதிகளில் ரோசனகிரிகைகள் செய்யலாம்.

    மரீசாதி சூரணம் :- மிளகு, திப்பிலி, கோஷ்டம், இந்துப்பு,சீரகம், சுக்கு, வசம்பு, பெருங்காயம், வாய்விளங்கம், கடுக்காய், சித்திரமூலம், ஓமம் இவைகளை சமஎடையாய் சூரணித்து இதற்கு இரண்டு பாகம் அதிகமாக வெல்லத்தை கலந்து வேளைக்கு 1/2 முதல் 1 தோலா விகிதம் சாப்பிட்டு வெந்நீர் சாப்பிடவும் சகல மூலரோ கங்கள் நிவர்த்தியாகும். வாதமூலத்திற்குச் சிறந்தது.

    பித்தமூலத்திற்கு துத்தூராதி சூரணம் :- பழச்சாற்றில் ஊறவைத்து கழுவியுலர்த்தி சுத்திசெய்த ஊமத்தன் விரை ஒரு பங்கு திப்பிலி, சுக்கு, கடுக்காய், வெட்டிவேர், இவைகள் வகைக்கு இரண்டு பங்கு இவைகளை சூரணித்து 8 குன்றி எடை சூரணத்தை 1 தோலா நெய், சர்க்கரை, தேன் இவைகளில் கலந்து இரவில்சாப்
    பிட்டால் பித்தமூலம் நிவர்த்தியாகும்.

    அபமார்க்காதி சூரணம் :- நாயுருவி விரை, சித்திரமூலம், சுக்கு, கடுக்காய், கோரைக்கிழங்கு, சீமை நிலவேம்பு இவைகள்சம எடையாய்ச் சூரணித்து இதற்குச் சமம் வெல்லத்தைக் கலந்து வேளைக்கு 1/2 அல்லது 1 தோலா விகிதம் சாப்பிட்டு ஒளஷதம் ஜீரணித்து பிறகு மோர் சாதத்தை சாப்பிடவேண்டியது. மூலவியாதிகள்
    நிவர்த்தியாகும்.

    வியோஷாதி சூரணம் :- சுக்கு, மிளகு, திப்பிலி, நன்கு சுத்திசெய்த சேராங்கொட்டை, வாய்விளங்கம், எள்ளு, கடுக்காய், இவை களை சமஎடையாய் சூரணித்து சர்க்கரை கலந்து திரிகடிப்பிரமாணம் சாப்பிட்டால் மூலம், வீக்கம், குஷ்டரோகம், அக்கினிமந்தம், கிருமி பாண்டுரோகம் இவைகள் நீங்கும்.

    விஜயா சூரணம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிப்பருப்பு சுக்கு, திப்பிலி, மிளகு, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சிறு நாகப்பு, வசம்பு, பெருங்காயம், யவாக்ஷ¡ரம், நவாக்ஷ¡ரம், மஞ்சள் மரமஞ்சள், செவ்வியம், கடுகுரோகணி, வெட்பாலைவிதை, தண்ணீர் விட்டான்கிழங்கு, பஞ்சலவணம், மோடி, வில்வம்பழம், குரோசாணியோமம், இந்த 28 சரக்குகளை சமஎடையாய் சூரணித்து 1/4 பலம் சூரணத்தை வெந்நீரிலாவது ஆமணக்கெண்ணெயில் கலந்தாவது குடித்தால் மூலரோகம், மேல்மூச்சு, சோபை, பகந்தரம், ஹிருதய
    சூலை, பாரிசசூலை, வாதகுன்மம், உதரம், விக்கல், பாண்டுரோகம், காமாலை, ஆமவாதம், உதாவர்த்தம், அண்டவாதம், கிருமி கிறாணி இவை யாவும் நிவர்த்தியாகும்.

    சித்தரசம் :- நெய் 28 தோலா, ஆட்டுப்பால், ஆட்டுஇரைச்சிரசம், மாதுழம்பழரசம் இவைகள் வகைக்கு 128 தோலாகாளான், திப்பிலி, சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு, வில்வம்பழம் விளாம்பழம், புளி, காட்டாத்திப்பு, ரத்தச்சந்தனம், வெட்டிவேர், குறுவேர், லோத்திரம், குங்கிலியம், தாமரை இதழ், மஞ்சிஷ்டி, இலந்தை
    செவ்வியம், இலவங்கப்பட்டை, தாமரைத்தண்டு, ஏலக்காய்சிற்றாமுட்டி, அதிமதூரம், இலவம்பிசின் வகைக்கு 1 தோலா இவையாவையும் நெய்யில் கொட்டி கிருதபக்குவமாக சமைத்து அந்த நெய்யை குடித்தால் மூலவியாதி, கிறாணி, மூத்திரக்கிருச்சரம் பாண்டுரோகம், சுரம், அதிசாரம், இடுப்புநோய், பித்தமூலம் இவை யாவும் நிவர்த்தியாகும்.

    சூரண மோதகம் :- கருணைக்கிழங்குரசத்தில், மிளகு, திப்பிலிசுக்கு, சித்திரமூலம், சீரகம், பெருங்காயம், ஓமம், குரோசாணி ஓமம் இவைகள் சமஎடையாய் சூரணித்து கலந்து இந்த சூரணத்திற்கு நாலில் ஒரு பாகம் இந்துப்பு போட்டு பிறகு எலுமிச்சம்பழ ரசத்தினால் ஒருநாள் அரைத்து உலர்த்தி வைத்துக்கொள்ளவும். இதை அருந்திவர சூலை, கிரஹணி, அதிசாரம், குன்மம், மூலவியாதி வாயுபிரகோபம் இவைகள் நீங்கும். இந்தச்சூரணத்தை ரத்தப் பித்தரோகிக்கும் கர்ப்பிணிக்கும் கொடுக்கக்கூடாது.

    பத்தியாதி மோதகம் :- கடுக்காய், சுக்கு, திப்பிலி, சித்திரமூலம், இவைகள் வகைக்கு பலம் 1, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகள் வகைக்கு தோலா 1, இவைகளை சூரணித்து 40 தோலா வெல்லத்தைக் கலந்து 1/4 பலம் விகிதம் கொடுத்தால் மூலவியாதி நிவர்த்தியாகும்.

    சூரண மோதங்கள் :- சித்திரமூலம் 4 தோலா, கருணைக்கிழங்கு 8 தோலா, சுக்கு 2 தோலா, மிளகு 1/2 தோலா, சேராங்கொட்டை, மோடி, வாய்விளங்கம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், திப்பிலி, தாளிசபத்திரி இவைகள் வகைக்கு 1 தோலா பெரியமரச்சக்கை 8 தோலா, பனங்கிழங்கு 1 தோலா, இலவங்கப்பட்டை, ஏலக்காய் இவைகள் வகைக்கு தோலா 1/2, இவைகளைச்சூரணித்து சூரணத்திற்கு இரண்டு பங்கு அதிகமாக வெல்லத்தை கலந்து 1/2 முதல் 1 தோலா எடையுள்ள உருண்டைகள் செய்து சாப்பிட்டால் அப்போதே மூலவியாதி நாசமாகும். அக்கினிதீபனம் உண்டாகும்.



    சந்திரபிரபாவ வடுகங்கள் :- அயச்செந்தூரம் 8 தோலா, சுத்த குங்கிலியம் 8 தோலா, சர்க்கரை 16 தோலா, சிலாசத்து பற்பம் 82 தோலா, மூங்கிலுப்பு 4 தோலா, வாய்விளங்கம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், சுக்கு, மிளகு, திப்பிலி, சீமைநிலவேம்பு ஆனைத்திப்பிலி, மஞ்சள், மரமஞ்சள், திப்பிலிமூலம், தேவதாரு, சவ்வர்ச்சலவணம், இந்துப்பு, கொத்தமல்லி, சுவர்ணமாஷிகம் கிச்சிலிக்கிழங்கு, அதிவிடயம், பொன்ரேக்கு, சர்ஜக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், கோரைக்கிழங்கு, வசம்பு, 1 தோலா வீதஞ்சூரணித்து தேன்
    சேர்த்துக் கலந்து வேளைக்கு 1/4, 1/2 தோலா வீதம் சாப்பிட்டால் சகல மூலவியாதிகள், பாண்டுரோகம், பகந்தரம், மூத்திரகிருச்சரம் பிரமேகம் இவைகள் நிவர்த்தியாகும்.

    திரிபலாதிமாத்திரைக
    ள்:- திரிபலை, பஞ்சலவணங்கள், கோஷடம், தேவதாரு, வாய்விளங்கம், வேப்பன்பழம், பேராமுட்டி சிற்றாமுட்டி, மஞ்சள், மரமஞ்சள், சர்ஜக்ஷ¡ரம், இவையாவையும் சமஎடையாக ஒன்றாய் கலந்து புங்கன் பட்டை ரத்தினால் அரைத்து இலந்தைவிதை அளவு மாத்திரைகள் செய்து வைத்துக்கொள்ளவும்.

    ஒரு மாத்திரையை மோருடன் சாப்பிட்டால் குன்மம், வெந்நீரில் சாப்பிட்டால் அக்கினிமந்தம், வாய்விளங்கம், கியாழத்தில் சாப்பிட்டால் கிருமிரோகம், கருங்காலி கியாழத்துடன் சாப்பிட்டால் சர்மதோஷம், நீருடன் சாப்பிட்டால் மூத்திரகிருச்சரம், ந்ல்லெண்ணெய்யுடன் சாப்பிட்டால் இருதயரோகம், வெட்பாலை சுரசத்துடன் சாப்பிட்டால் சூலைகள், திப்பிலி க்ஷ¡யத்துடன் சாப்பிட்டால் ஜலோதரம், மற்றும் அனுபானபேதத்தினால் சகலரோகங்கள் நிவர்த்தியாகும்.

    யோகராஜ குக்குலு :- திப்பிலி, ஆனைத்திப்பிலி, சித்திரமூலம் வாய்விளங்கம்,வெட்பாலை பூனைக்காஞ்சொரி, கடுகுரோகணி, கண்டு பாரங்கி, வட்டத்திருப்பிவேர், ஓமம், பெருங்கடம்பைவேர், சுக்கு
    பெருங்காயம், செவ்வியம் இவைகள் சமஎடை இவைகளுக்கு சமமாக குங்கிலியம் சேர்த்து சூரணித்து தேன் விட்டரைத்து மெழுகு பதத்தில் எடுத்து வைத்துக்கொண்டு 1/4, 1/2 தோலா எடை தேனுடன்
    உட்கொண்டால் ரத்தமூலம், வாதமூலம், குன்மம், கிறாணிஇவைகள் யாவும் குணமாகும்.

    ரஜனீ சூரண யோகம் :- மஞ்சள் சூரணத்தை சதுரங்கள்ளிப பாலினால் அடிக்கடி பாவனை செய்து கயிறுக்கு தடவி உலர்த்தி மூலவியாதி முளைக்கு கட்டினால் முளைகள் அறுந்து விழுந்து விடும். பகந்
    தர வியாதிக்கும் இம்மாதிரி கட்டினால் நிவர்த்தியாகும்.

    சவ்வியாதி சூரணம் :- செவ்வியம், சுக்கு, திப்பிலி, மிளகுவட்டத்திருப்பி, சகலக்ஷ¡ரங்கள் கொத்தமல்லி, ஓமம், திப்பிலி மூலம் பீடாலவணம், இந்துப்பு, சித்திரமூலம், விலவம்பழம், கடுக்காய், இவைகளை சமஎடையாகச் சேர்த்து அரைத்து கல்கஞ்செய்து நெயகலந்து கிருதபக்குவமாக கலந்து குடித்தால் வாதரத்தத்தை
    குறைக்கும்.

    கல்கத்திற்கு நாலு பாகம் அதிகமாக தயிரை கலந்து நெய்ப்பதமாகச்சமைத்து கொடுத்தால் பிரவாஹிகை, குதபிரம்ஸம் கிருச்சரம், குதரசிராவம், குதஸ்தானம், தொடைகள், ஜந்துகள் இவைகளின் சூலைகள் நிவர்த்தியாகும்.

    கருணைக்கிழங்கு லேகியம் :- காராக்கருணை, காட்டுக்கருணை, விரல்கருணை, புளியரணை, மருட்கிழங்கு,கோரைக்கிழங்கு, குமரிவேர், மாங்கொட்டைப்பருப்பு, சித்திரமூலம், சுக்கு, கடுக்காய்த்தோல்

    சரக்கொன்றைப்புளி, பிரண்டை, நெல்லிவற்றல், சீரகம் வகைக்குப்பலம் 1/2 இவைகளை தனித்தனி உலர்த்தி வெலுப்பி இடித்துச்சூரணித்து பிறகு ஒன்றாக கலந்து வைத்துக்கொள்க. பிறாகு 7 1/2 பலம் பனைவெல்லத்தை நீர்விட்டு கரைத்துவடிகட்டி கடாயிலிட்டு அடுப்பிலேற்றி எரித்து பாகுபதம் வரும்போது முன் செய்து வைத்
    துள்ள சூரணத்தைக் கொட்டி கிளறி நெய் தேன் சேர்த்துக் கலந்துவைத்துக்கொள்க. இதில் வேளைக்கு சுழற்ச்சிக்காயளவு தினம்இரு வேளையாக அருந்திவர மூலநோய்கள் யாவும் குணமாகும்.

    நாகபற்பம் :- இலுப்பை எண்ணெய்யில் 21 முறை உருக்கிசாய்த்து சுத்திசெய்து எடுத்த சிறுகண் நாகத்தை கடாயிட்டுஅடுப்பிலேற்றி நன்கு எரித்து ஒருகி வரும்போது சிற்றாமண்க்கிலை சாறு சிறிது விடவும். பிறகு நன்கு சூடாகும்படி எரித்து மீண்டும் சிறிது சிற்றாமண்க்கு இலைச்சாற்றை விடவும். இப்படி இரண்ட மூன்று முறைசெய்து பிறகு சிற்றாமணக்கு வேர்களை கத்தையாகக் கட்டிகொண்டு தேய்த்து வறுத்து நன்கு எரித்து வர நாகமானது மடிந்து பூர்த்து வெளுத்துவரும். முற்றும் பூர்த்து விட்டதென தெரிந்ததும் கீழிறக்கி ஆறவிட்டு வஸ்திரகாயஞ் செய்து திப்பியைநீக்கி விட்டு மெல்லிய தூள்களை கல்வத்திலிட்டு துத்தி இலைச்சாறுவிட்டு இரண்டு ஜாமம் நன்கு அரைத்து வில்லை அஎய்துலர்த்தி அகலிடக்கிச் சீலைமண்செய்து புடமிடவும். இப்படி இரண்டொரு புடமிட நல்ல பற்பமாகும். அரைத்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு குன்றிஎடை வீதம் தினமிரு வேளையாக நெய், வெண்ணெய் முதலியவற்றுடன் கொடுக்க கருணைக் கிழங்கு லேகியம் முதலியவைகளையும் அருந்திவர மூலரோகங்கள்யாவும் குணமாகும்.

    மூலரோக பத்தியங்கள் :- கருணைக்கிழங்கு, புடலங்காய் சாரணை, பசும்மோர், பசும்நெய், பசும்வெண்ணை, பெருங்காயம், மிளகு, தேவதாரு, இந்துப்பு, முள்ளங்கத்திரி, பாலை, வசம்பு, கடுக்காய், ஆமணக்கு நெய், வெந்தயக்கீரை, முளைக்கீரை, துத்திக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை மாங்காய்பிஞ்சு, இவைகள் மூலவியாதிக்கு பத்தியங்கள்.

    அபத்தியங்கள் :- காராக்கருணை, உளுந்து, இலுப்பைபிண்ணாக்கு, தயிர், மீன், உஷ்ணமானதும் காரமுள்ளதுமான பதார்த் தங்கள், மொச்சை, கத்திரிக்காய். வில்வம், பருப்பு, தினுசுகள், மாமிசம், கடினமான பதார்த்தங்கள், குதிரை, ஒட்டகம், யானை, இவைகளின் மீது சவாரிசெய்தல், நீராடுதல், அதிக உழைப்பு, சதா
    சிந்தனை செய்தல், அதிக நேரம் உட்கார்ந்திருத்தல், மலச்சிக்கல் மிகுபுணர்ச்சி இவைகள் மூலவியாதிக்கு அச்fபத்தியங்கள்.thanks:http://ayurvedamaruthuvam.forumta
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மூல நோய்க்கு சிகிச்சைகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top