தசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா? - தமிழர்களின் சிந்தனை களம் தசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, March 18, 2014

    தசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா?

    தசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா?
    -----------------------------------

    ஒரு தசையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும், உடலில் தண்ணீரின் அளவு குறைவதாலும், மன அழுத்தம் மற்றும் களைப்பு ஆகியவற்றின் காரணமாகவே தசைப் பிடிப்பு ஏற்படுகிறது. பின்னங்கால்களில் தசைப் பிடிப்பு ஏற்பட்டால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும்.

    அதே போல தசை எந்தவித காரணமும் இல்லாமல் ஒன்றுக்கொன்று இறுக்கிக் கொண்டாலும் தசைப் பிடிப்பு வலி ஏற்படும். நமது நரம்பு மண்டலத்தில் தவறான இரசாயன சமிச்ஜைகள் அனுப்பப்பட்டு தசைகள் ஒன்றுக்கொன்று பின்னிக் கொள்கின்றன. இந்த தசைப் பிடிப்பை வீட்டிலேயே சரி செய்வதற்கான வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்.

    ஒத்தடம் கொடுக்கவும்
    ஒரு மின்சார வெப்பமூட்டும் அட்டையோ அல்லது சுடுநீரில் நினைத்து பிழிந்த துணியையோ எடுத்து, தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் வையுங்கள். இது தசைகளுக்கு ஓய்வு கொடுக்கவும் மற்றும் இரத்த ஓட்டத்தை சரி செய்யவும் உதவும். அந்த வெப்ப அட்டையை குறைவான அளவில் வைத்து விட்டு, சுமார் 20 நிமிடங்களுக்கு தசைப் பிடிப்புள்ள இடத்தில் வைக்கவும். மீண்டும் 20 நிமிடங்கள் இடைவெளி விட்டு அட்டையை வைக்கவும்.

    மிதமான சுடுநீரில் குளிக்கவும்
    நீண்ட நேரத்திற்கு, மிதவெப்பமான தண்ணீரில் குளிக்கவோ அல்லது மூழ்கி இருக்கவோ செய்யுங்கள். நிவாரணம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், தண்ணீரில் ½ கோப்பை எப்சம் உப்பை போடவும். எப்சம் உப்பில் உள்ள மக்னீசயம் தசைகளை ஓய்வாக இருக்கச் செய்யும்.

    அழுத்தம் கொடுக்கவும்
    தசைப் பிடிப்பின் மையப்பகுதியை கண்டு பிடியுங்கள். அந்த இடத்தில் கட்டை விரலையோ, உள்ளங்கையையோ அல்லது கையை முறுக்கிய நிலையில் வைத்தோ அழுத்தம் கொடுங்கள். இந்த அழுத்தத்தை 10 நொடிகளுக்கு வைத்து விட்டு, மீண்டும் அழுத்தம் கொடுங்கள். இப்படி செய்யும் போது சற்றே அசௌகரியமாக இருந்தாலும், மிகவும் வலி தரும் விஷயமாக இருக்காது. பலமுறை இதை செய்த பின்னர், உங்களுடைய தசைப் பிடிப்பு இடம் தெரியாமல் காணமால் போய் விடும்.

    ஊட்டச்சத்து குறைபாடு
    பொட்டாசியம், சோடியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்களின் அளவு குறைவாக இருந்தால் கூட தசைப் பிடிப்பு ஏற்படும். நீங்கள் உங்களுடைய உணவில் அதிகளவு சோடியம் சேர்க்காவிட்டாலும், மற்ற எல்லோரையும் விட அதிக அளவு அது உங்களுக்குத் தேவைப்படுவதாகவும் இருக்கும். முழு தானிய ரொட்டிகள் மற்றும் பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் அதிக அளவு மக்னீசியம் உள்ளது. வாழை, ஆரஞ்சு மற்றும் பரங்கிக் காய் போன்ற பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. பால் பொருட்களில் கால்சியம் நிரம்பியுள்ளது.

    உடற்பயிற்சி
    உடற்பயிற்சி செய்யும் போது தசைப் பிடிப்பு ஏற்படுவதை தவிர்க்க, ஒவ்வொரு முறை உடற்பயிற்சி செய்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னும் 2 கோப்பை தண்ணீர் அருந்தவும். பின்னர் நிறுத்தி விட்டு 125 முதல் 250 மில்லி தண்ணீரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் குடிக்கவும். இதனால் உங்களுக்கு அதிக வியர்வை வந்தால், விளையாட்டு வீரர்கள் அருந்தும் பானங்களான கேடோரேட் போன்றவற்றை குடிக்கவும். அது இழந்த சோடியம் மற்றும் சில எலக்ட்ரோலைட்களை மறுசீரமைக்கும்.

    தூங்கும் நிலை
    இரவு நேரங்களில் கால்களில் தசைப் பிடிப்பு ஏற்படுவதை தவிர்க்க விரும்பினால், பாதங்களை நீட்டிய நிலையில் வைத்து படுக்க வேண்டாம். அதே போல, உங்களுடைய போர்வையை மிகவும் இறுக்கமாக போட்டு இழுக்க வேண்டாம். இவ்வாறு செய்தால் பாதங்கள் கீழ் நோக்கி வளையத் தொடங்கி, தசைப் பிடிப்பு ஏற்படுகிறது.

    எண்ணெய் மசாஜ்
    கோலக்காய் எண்ணெய் (wintergreen oil) மற்றும் காய்கறி எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து மசாஜ் செய்து தசைப் பிடிப்பை சரி செய்யலாம். கோலக்காயில் இருக்கும் மெத்தில் சாலிசிலேட், வலியை குறைத்து, இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இந்த கலவையை ஒரு நாளைக்கு சில முறைகள் ஹீட்டிங் பேட் இல்லாமல் தடவி வந்தால், உங்களுடைய தோல் எரிந்து விட வாய்ப்புகள் உள்ளன.

    வைட்டமின் ஈ உணவுகள்
    வைட்டமின் ஈ அதிகம் சாப்பிட்டு வந்தால், இரவு நேர கால் ததை பிடிப்புகளை தவிர்க்கலாம். மேலும் வைட்டமின் ஈ தமனிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    தண்ணீர் அதிகம் குடிக்கவும்
    தசைப் பிடிப்புகள் ஏற்பட உடலில் நீர்மச் சத்து அதிகம் இல்லாததும் காரணமாக இருப்பதால், போதிய அளவு தண்ணீரை அருந்தி வரவும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    1 comments:

    Unknown said... August 6, 2019 at 10:26 AM

    Myasthenia gravis ku solution kodunga

    Item Reviewed: தசைப் பிடிப்புக்கு வீட்டிலேயே நிவாரணம் பெற வேண்டுமா? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top