கலரிங் செய்வது ஆபத்தா? - தமிழர்களின் சிந்தனை களம் கலரிங் செய்வது ஆபத்தா? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Tuesday, March 4, 2014

  கலரிங் செய்வது ஆபத்தா?

  கலரிங் செய்வது ஆபத்தா?

  ஒரு காலத்தில் நரைமுடியை மறைப்பதற்காகதான் தலைமுடிக்கு கலரிங் செய்தார்கள். ஆனால் இன்றைய இளம்பெண்கள் தங்களை அழகாக காண்பிப்பதற்காக சிவப்பு, பிரவு, காப்பர், கோல்டு என்று ஒருவிதமாக கலரிங் செய்து கொள்கிறார்கள். 

  இந்த கலரிங்கில் இரண்டு வகை உண்டு. ஒன்று பெர்மனன்ட் என்கிற நிரந்தர கலரிங். மற்றொன்று செமி பெர்மனன்ட் என்கிற தற்காலிக வகை. நிரந்தர முறைப்படி கலரிங் செய்தால் கூந்தலில் அப்படியே அந்த நிறமி இருக்கும். முடிவெட்டும் போது தான் அவை மறையும். 

  இரண்டாவது வகை கலரிங் தற்காலிகமானது. இது கூந்தலை நீரில் அலச அலச கலரிங் போய் விடும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த இரண்டாவது முறைதான் ஆரோக்கியமானது. முதல் வகையில் ஆபத்துகள் அதிகம். காரணம் அதில் செய்யப்படும் கலரிங் கிரீமில் அமொனியா அதிகம் சேர்க்கப்பட்டு இருக்கும். 

  அதனால் தலைமுடிக்கு நிறைய பிரச்சனைகள் வரும். முடி உடைந்து போவதோடு கண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு, தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனால் நிரந்தர கலரிங் செய்வது நல்லதல்ல. 

  அப்படியென்றால் தற்காலிக கலரிங்கை தாராளமாக செய்யலாமா? என்றால் அதிலும் ஆபத்து இருக்கிறது. அதையும் அளவோடு தான் செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ செய்தால் பரவாயில்லை. அடிக்கடி இந்த கலரிங் செய்தால் ஆபத்து தேடி வந்துவிடும். 

  என்ன ஆபத்து என்கிறீர்கள்? நிரந்தர கலரிங்கால் ஏற்படும் அதே ஆபத்துதான். இப்படி ஆபத்துகள் இருந்தாலும் கலரிங் செய்து கொள்வதற்கு பெண்கள் தயங்குவதில்லை. இதற்கு இன்றைய இளம் தலைமுறையின் ரசனை மாறியிருப்பது தான் காரணம். 

  பெண்கள் தங்கள் கூந்தலை குட்டையாய், அலைஅலையாய்...மயில் தோகையை போன்று விரித்துபோட்டுகொண்டு வருவதைத்தான் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்த வகையான கூந்தலைதான் அவர்களுக்கு பிடித்தும் இருக்கிறது. 

  உணவுப்பழக்கத்தால் ஒரு பக்கம் தங்கள் ஆரோக்கியத்தை அவர்கள் கெடுத்துகொள்கிறார்கள். மறுபுறம் ஆபத்தான அழகுபடுத்தலால் மேலும் தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கிறார்கள். இளம்பெண்கள் இத்தகைய கவர்ச்சிக்கு மயங்காமல் இருப்பதே அவர்களுக்கு இயற்கையான அழகு.

  நன்றி: மாலைமலர்
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: கலரிங் செய்வது ஆபத்தா? Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top