பிளாஸ்ரிக் போத்தல் தண்ணீரினால் விரைவில் பூப்படையும் சிறுமிகள்! - தமிழர்களின் சிந்தனை களம் பிளாஸ்ரிக் போத்தல் தண்ணீரினால் விரைவில் பூப்படையும் சிறுமிகள்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, December 20, 2011

    பிளாஸ்ரிக் போத்தல் தண்ணீரினால் விரைவில் பூப்படையும் சிறுமிகள்!

    ள்ளிச் சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே தங்களது குழந்தைமை கடக்கும் முன்பாகவே வெகு விரைவாகப் பூப்படைந்து விடுகிறார்கள். இ ன்றைய இளம் அம்மாக்களை வெகு வாகக் கவலை கொள்ளச் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
    ஏன் இப்படி ஆகிறது?! 

     குடும்ப வாகு, மரபியல் காரணங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் இவை யெல்லாம் தாண்டி இந்த விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பூதம் ஒளிந்து கொண்டு  சமீப காலங்களாக பெண் குழந்தை களைப் பெற்ற அம்மாக்கள்  எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது.அதைப் பற்றியதான விழிப்புணர்வும் எச்சரிக்கையும் பொது மக்களில்  எத்தனை பேருக்கு உண்டோ தெரியவில்லை!

    அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்தாலும் சரி அல்லது குழந்தைக்குப் தாய்ப்பால் போதவில்லை என்றாலும் சரி சிலர் குழந்தை பிறந்த அன்றே  கூட தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட ஃபீடிங் பாட்டில்கள் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர். 

    மகப்பேறு மருத்துவர்கள் பலர் இதை அனுமதிப்பதில்லை. ஆனாலும் குழந்தை பசியால் அழுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் இப்படிச் செய்ய நேர்கிறது. குழந்தையின் பசி தீர்ப்பதில் தவறுகள் இல்லை. ஆனால் பயன்படுத்தப்படும் பொருளில் தான் பெரும் ஆபத்து ஒளிந் திருக்கிறது.

    பிறந்த குழந்தைகளின் ஃபீடிங் பாட்டில் கள் மட்டும்தான் என்றில்லை. பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள்  ட்ரான்ஸ்பரன்ட் ஸ்நாக்ஸ் டப்பாக்கள்  இவை எல்லாமும் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக்குகள் பாலி கார்பனேட் பிளாஸ் டிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் குகளில் இருக்கும் பிஸ்ஃபீனால்கி எனும் மூலக்கூறு ஃபீடிங் பாட்டில்கள் மூலம் குழந்தைகளின் உடலுக்குள் ஊடுருவி ஈஸ்ட்ரோஜென்  ஹார்மோன் சுரப்பை அதிக மாக்குகிறது. இதே மூலக்கூறு ஆண் குழந்தைகளின் உடலுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா? ஆண் குழந்தைகள் வளர வளர  அவர்களது விந்தணுக் களின் எண்ணிக்கையை குறைக்கிறது.

    வழக்கத்தை விட ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாவதால் தான் இன்றைக்குப் பெண் குழந்தைகள் பத்து, பதினொரு வயது
    களி லேயே தங்களது விளையாட்டுப் பருவத்தை,  பேதைமையை தொலைத்து அதிவேகமாக பூப்படைந்து விடுகிறார்கள். அதற்கு காரணம் உள்ளிருந்து மிரட்டும் மாயபூதம் இந்த பிஸ்ஃபீனால்கி தான் என்பது பொது  மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

    அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக இந்த இதழில் காண்போமா!

    குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக் கான உபயோகப் பொருட்களில் இந்த பாலிகார்போனேட் பிளாஸ்டிக்குகள் அதிக மாகப் பயன்படுத்தப் படுகின்றன, ஏனெனில்;

    மிகவும் லேசானது, எடையற்றது. தரமான பிளாஸ்டிக், உறுதியானது; தோற்றத்தில் துல்லியமான கண்ணாடி போன்றது; ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது மின்சாரமோ,  வெப்பமோ தாக்க இயலாதது; போன்ற லாபகரமான பிரதான காரணங்கள் இருக்கை யில் இந்தப் பிளாஸ்டிக்குகளை தயாரிப் பாளர்களும் சரி நுகர்வோர்களும் சரி எப்படி  தவிர்ப்பார்கள்?

    பாலி கார்பனேட் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் வேறு பொருட்கள்
    வீடியோ சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், எலக்ட்ரானிக் கருவிகள், ஆட்டோமேடிக் விளையாட்டுப் பொருட்கள், விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு சாதனங்கள், மருத்துவ  சாதனங்கள் etc... etc.

    இதன் நீடித்த உழைப்பு; உடையாத் தன்மை; வெப்பம் தாங்கும் தன்மை யினால் இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் பொரு ட்கள் தயாரிக்கவும் பயன் படுகிறது.

    பிஸ்ஃபீனால் (கி) என்றால் என்ன?

    பிஸ்ஃபீனால் கி என்பது பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் மிக முக்கியமான கட்டு மானப் பொருள். இது ஒரு வேதிப் பொருள், இதன் பெயர் 22 பிஸ் 4 ஹைட்ராக்சி  ஃபினைல் ப்ரோபேன் (22 Bis4 Hydroxy pheyl propae ).

    பாலி கார்பனேட் பிளாஸ்டிக்கின் பிஸ் பினால்கி மிக மிக குறைந்த அளவில் நழுவி கரைந்து அது வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர் பானங்களில்  ஊடுருவி நிற்கிறது என்று உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கை களும் ஆராய்ச்சி முடிவுகளும் தகவல் தெரிவிக்கின்றன.

    அப்படி உணவுப் பொருட்களில் கரைந்து ஊடுருவி நிற்கும் பிஸ்ஃபீனால் எவ்வளவு தெரியுமா?

    0?.000000005 (5/100000000) மில்லிகிராம் அளவு அதாவது கோடியில் 5 மடங்கு தான். ஒருநாளில் நம் எடையின் ஒரு கிலோவுக்கு 0.0000125 மில்லி கிராம் அளவு  பிஸ்ஃபீனால்கி நமக்குத் தெரியாமலே நமது உடலுக்குள் சென்று விடுகிறது.

    பிஸ்ஃபீனால்கி என்னவெல்லாம் செய்கிறது?

    இது மனிதனின் ஹார்மோன்களை நரம்பியல் செயல்பாடுகளைப் பாதிக்கிறது, ஜீன்களின் தன்மையை மாற்றி அமைக்கும் குணமுடையது என்று அறிவியல் சொல் கிறது.  பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் இருந்து கரையும் பிஸ்ஃபீனால்கி பெரியவர் களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

    முக்கியமாக பிறந்த குழந்தையிலிருந்து 18 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு பிஸ்ஃபீனால் பாதிப்பு வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகரிக்கிறது.

    ஏனெனில் 3 மாத குழந்தையின் எடை சுமாராக 6 கிலோ தான். அப்படியெனில் பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

    பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் கோரமுகங்கள்...

    பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கால் ஆன பால் பாட்டில். தண்ணீர் பாட்டிலை சூடான நீரில் கழுவும்போது அல்லது சூடான பாலை ஊற்றும்போது பாலிகார்பனேட் பிளஸ்டிக்கில் உள்ள பிஸ்ஃபீனால்கி கரைந்து பாட்டிலுக்குள் உள்ள உணவில் கலந்து ஊடுருவி குழந்தையின் வயிற்றுக் குள்ளும் நுழைகிறது.

    இதன் விளைவு என்ன?

    வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தை யின் மூளையைப் பாதிக்கிறது
    இந்தக் குழந்தைகள் சீக்கிரமே பருவ வயதை எட்டுகின்றன.

    தற்காப்பு சக்தியின் சமன் தன்மை தடுமாறுகிறது.

    இவர்கள் தங்கள் வாழ்நாளின் பிற் பகுதியில் பருமன், சர்க்கரை நோய், புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

    பாதிப்பு?!

    பிஸ்ஃபீனால்கி எனும் வேதிப்பொருள் 1938இல் கண்டுபிடிக்கப்பட்டது, இது செயற்கை
     ஈஸ்ட்ரோஜென் (பெண் ஹார்மோன்) உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.இதனால்  ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும்.

    பிஸ்ஃபீனால்கி குழந்தைகளின் உடலில் ஈஸ்ட்ரோஜென் போலவே செயல்படும்.

    நரம்பு மற்றும் நடத்தை தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.

    எதிர்காலத்தில் ப்ராஸ்டேட் (PROSTATE) மற்றும் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

    எல்லாம் சரி தான்... ஆனால் பாட்டிலில் பிஸ்ஃபீனால்கி உள்ளது என எவ்வாறு கண்டுபிடிப்பதாம் ?

    அது ரொம்ப ஈசி தாங்க!

    பாட்டிலின் அடிப்பகுதியில் ‘7’ என்ற எண் இருக்கும். ஒரு முக்கோணம் காணப் படும், அதற்கு அருகில் ‘PC’ (Polycarboate) என்ற எழுத்து இருக்கும்,  இப்படி குறிப்பிட்டிருந்தால் அந்த பிளாஸ்டிக்கில் பிஸ்ஃபீனால் உள்ளது என்று அறியலாம். 

    முக்கோணத்திற்குள் காணப்படும் எண் ப்ளாஸ்டிக்கின் தரம் பற்றி குறிப்பிடும், இவற்றில் 1, 2, 23 எண்களிருப்பின் அவை மிகவும் தரம் குறைந்தவை.

    3, 5, 7 எண் இருந்தால் பிளாஸ்டிக்கின் தரம் பரவாயில்லை. 

    சரி குழந்தைகளை பிஸ்ஃபீனால்கி யின் தாக்குதலில் இருந்து எப்படிக்காப்பாற்றுவது?!

    கண்ணாடி பாட்டில்களைப் பயன் படுத்தலாம்.

    தொடர்ந்து பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தினால் பாட்டில் களை வெறும் சோப்பு நீரில் மட்டும் கழுவ வேண்டும். டிடர்ஜென்ட் அல்லது டிஷ்வாஷ்  பார் பயன்படுத்தக் கூடாது.

    பாட்டில் சூடாவதைத் தவிர்க்க வேண்டும். பாட்டிலை சூடான நீரில் கழுவுவதோ, வெயிலில் காயவைப்பதோ கூடாது.
    • Blogger Comments
    • Facebook Comments

    2 comments:

    Anonymous said... December 21, 2011 at 8:23 AM

    மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயத்தினை அருமையாக பதிவு செய்து, ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி! இப்பதிவினை எனது பிளாக்கிலும் பிரசுரிக்க அனுமதி தரவும்.
    http://atchaya-krishnalaya.blogspot.com

    Item Reviewed: பிளாஸ்ரிக் போத்தல் தண்ணீரினால் விரைவில் பூப்படையும் சிறுமிகள்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top