கான்டக்ட் லென்ஸ் அணியப் போறீங்களா? contact lens Are you going to wear? - தமிழர்களின் சிந்தனை களம் கான்டக்ட் லென்ஸ் அணியப் போறீங்களா? contact lens Are you going to wear? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, March 19, 2012

    கான்டக்ட் லென்ஸ் அணியப் போறீங்களா? contact lens Are you going to wear?

    பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மட்டுமே கண்ணுக்கு லென்ஸ் அணிந்து வந்த நிலை மாறி, இன்றைய நவீன உலகில் 'கான்டக்ட் லென்ஸ்’ ஓர் அழகுச் சாதனமாக மாறிவிட்டது!   
    சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், கல்லூரிப் பெண்கள் என கான்டக்ட் லென்ஸ் மோகம் கொடி கட்டிப் பறக்கிறது. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த கான்டக்ட் லென்ஸ்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது நல்லது.
    ராஜன் ஐ கேர்’ மருத்துவமனையின் கண் மருத்துவச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஜாதா மோகனிடம் பேசினோம்... ''மிக மெல்லிய பிளாஸ்டிக் பாலிமரால் செய்யப்பட்ட கான்டக்ட் லென்ஸ், கண் விழிகளுக்குள் பொருத்தக்கூடியது. கான்டக்ட் லென்ஸில் மிக நுண்ணிய துளைகள் இருக்கும். இவற்றின் வழியாக கருவிழிக்கு ஆக்சிஜன் போகும்.
    கான்டக்ட் லென்ஸ்களில் இப்போது புதிய வரவாக 'காஸ்மெட்டிக் லென்ஸ்’, 'மல்ட்டி கலர் லென்ஸ்’ என்று பல்வேறு வகையான லென்ஸ்கள் கிடைக்கின்றன. பல வண்ணங்களில் கிடைக்கும் காஸ்மெட்டிக் லென்ஸ்களில், நிறமிகள் சேர்க்கப்படும். இந்த நிறமிகள் கண்ணின் கருவிழிக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைக்கின்றன. இதனால், கருவிழியில் ரத்தநாளம் வளர்ந்து கண்களில் நோய்த் தொற்று, அலர்ஜி போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஒரே லென்ஸை சரிவரப் பராமரிக்காமல் அதிக காலம் பயன்படுத்தும்போதும் மேற்கண்ட பிரச்னைகள் வரும் வாய்ப்பு உள்ளது.
    பொதுவாக, நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய லென்ஸ் வகைகளைத் தவிர்த்துவிட்டு, தினமும் மாற்றிக்கொள்ளத்தக்க வகையிலான 'டிஸ்போஸபிள் கான்டக்ட் லென்ஸ்’களைப் பயன்படுத்துவதே நல்லது. குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை மாற்றிப் போடக்கூடிய கலர் லென்ஸைப் போட்டுக்கொண்டால்கூட போதும். வருடக்கணக்கில் தொடர்ந்து அணிந்துகொள்ளும் லென்ஸ் வகைகளைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. தினமும் மாற்றிக்கொள்ளும் லென்ஸ் வகைகளால், கருவிழிகளுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதோடு, பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் தங்கியிருந்து நோய்த் தொற்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் மிக மிகக் குறைவு; சுத்தம் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
    மல்ட்டி கலர் லென்ஸ்களில் லைட் ஃபில்டரிங், ஸ்பெஷல் எஃபெக்ட் தொழில்நுட்பங்கள் உள்ளதால், நல்ல வெளிச்ச ஊடுருவலுடன் தெளிவான பார்வை கிடைக்கும். 'சாஃப்ட் லென்ஸ்’ என்று ஒரு வகை கான்டக்ட் லென்ஸ் உள்ளது. இதைப் பொருத்திக்கொண்டால், கண்ணுக்குள் எந்தவித உறுத்தலும் இருக்காது. ஆனால், இந்த சாஃப்ட் லென்ஸில் உள்ள குறைபாடு என்னவென்றால், பார்வைத் திறன் குறைவாக இருந்தால் தெளிவானப் பார்வை கிடைக்காது. நுணுக்கமான விஷயங்களைப் பார்ப்பதும்கஷ்டம். மேலும், வெளிச்சத்தைப் பார்க்கும்போது, கண்கள் அதிகப்படியாகக் கூசும்; குறைவான வெளிச்சத்திலோ, பார்வை மிகவும் மங்கலாகத் தெரியும்.
    மங்கலான பார்வைக் குறைபாடு உடையவர்களுக்காகவே 'ஹை டெஃபெனிஷன் லென்ஸ்’ என்ற அதிநவீன லென்ஸ் இப்போது வந்திருக்கிறது. நுணுக்கமான பார்வைத் திறன், கருவிழிக்குத் தங்குதடை இல்லாமல் ஆக்சிஜன் கிடைத்தல் போன்றவை இந்த லென்ஸின் ப்ளஸ்.
    இவை தவிர, சாஃப்ட் டோரிக் லென்ஸ், எக்ஸ்டெண்ட் வேர் லென்ஸ், ஸ்பெஷல் லென்ஸ் என்று விதவிதமான லென்ஸ் வகைகளும் கிடைக்கின்றன. கால்பந்து, சிலந்தி வலை, பேய் விழி, டைகர் ஐ என புதுப்புது டிசைன்களிலும் கான்டக்ட் லென்ஸ்கள் விற்கப்படுகின்றன.
    லென்ஸ் பராமரிப்பும், அதைப் பயன்படுத்தும் காலகட்டமும்தான் மிகவும் முக்கியம். லென்ஸைக் கண்ணுக்குள் பொருத்தும்போதும், கழற்றி எடுக்கும்போதும் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் ஸ்பெஷல் சொல்யூஷனைக்கொண்டே லென்ஸை சுத்தம் செய்ய வேண்டும். அதிகபட்சமாக கான்டக்ட் லென்ஸ்களை நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. பார்வைக் குறைபாடுகளுக்காக கான்டக்ட் லென்ஸ் போடுபவர்களுக்கு, எந்தப் பக்க விளைவுகளும் இல்லாத 12  லென்ஸ்கள் 1,200 ரூபாய்க்குக் கிடைக்கின்றன.
    கான்டக்ட் லென்ஸ் வாங்குவதற்கு முன்பு, கண் மருத்துவரை அணுகி ஈர விழிக் குறைபாடு, அலர்ஜி போன்ற பரிசோதனைகளை செய்து கொண்டு, அதற்கேற்ப லென்ஸைத் தேர்ந்தெடுத்து அணிவது அவசியம்!
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கான்டக்ட் லென்ஸ் அணியப் போறீங்களா? contact lens Are you going to wear? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top