மூட்டு வலி குறைய .இய‌ற்கை வைத்திய குறிப்புக்கள் - தமிழர்களின் சிந்தனை களம் மூட்டு வலி குறைய .இய‌ற்கை வைத்திய குறிப்புக்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, September 30, 2012

    மூட்டு வலி குறைய .இய‌ற்கை வைத்திய குறிப்புக்கள்


    மூட்டு வலி குறைய
    சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும்.
    பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும்.
    முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
    குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.
    கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.
    முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.
    வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.
    வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும்.
    நொச்சி இலைச் சாறை கட்டியாக எடுத்து மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் மூட்டு வலி குறையும்.
    நொச்சி இலைச் சாறை,மிளகு தூள் ,நெய் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.
    நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் மூட்டுவலி குறையும்.
    கருநொச்சி இலைகளை நறுக்கி, உப்பு சேர்த்து வதக்கி மூட்டு வலி மற்றும் வாதவலி மேல் கட்டி வந்தால் வலி குறையும்.
    கைப்பிடி உடைமர இலைகளோடு, மூன்று மிளகு சேர்த்து அரைத்து மூட்டு வலி மேல் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.
    அழிஞ்சில் இலைகளைத் துண்டுகளாக நறுக்கி, வதக்கி இளஞ்சூடாக மூட்டு வலி மேல் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
    காரட் இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் குறையும்.
    வில்வ மர இளந்தளிரை வதக்கி இளம் சூட்டோடு மூட்டுகளின் மீது ஒத்தடம் கொடுக்கலாம்.
    கடுகு எண்ணெயில் வெங்காய சாற்றை சிறிதளவு கலந்து வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டுவலி குறையும்.
    பருத்தி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.
    புங்கன் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி ,இந்நீரால் மூட்டுவலி ஏற்பட்ட இடத்தைக் கழுவி வந்தால் மூட்டுவலி குறையும்.
    அவுரி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக மூட்டுவலி மேல் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
    குப்பைமேனி இலைகளை எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன்,எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டுவலி குறையும்.
    குங்கிலியம் இலையின் சாறை இஞ்சி சாறு போல இந்த சாறை குடித்தால் மூட்டு வலி குறையு‌ம்.
    செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.
    மூக்கிரட்டை வேரை எடுத்து நைத்து தண்ணீர் விட்டு காய்ச்சி சாப்பிட்டு வர மூட்டுவலி குறையும்.
    அத்தி இலையை அரைத்து மூட்டில் வைத்து தினமும் கட்ட மூட்டு வலி குறையும்.
    கடலை இலையை அவித்து இளஞ்சூட்டோடு தினமும் மூட்டில் வைத்து கட்ட மூட்டு வலி குறையும்.
    எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை தைலம் பதம் வரும் வரை காய்க்கவும். ஆறியதும் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீரில் குளிக்க வலி குறையும்.
    சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
    கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.
    சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து சாப்பிட்டால் கைகால் வலி குணமாகும்.
    காலையில் சிறுதளவு தேனும் அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
    தூதுவளை இலையை மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து காலை மாலை சாப்பிடவும் கைகால் வலி குணமாகும்.
    சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து வலி உள்ள இடத்தில் பூசவும்.
    வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி & எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
    சிறிதளவு மருதாணி இலையை எடுத்து அதனுடன் நல்லெண்ணைய் சேர்த்து நன்றாக காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவினால் குணமாகும்.
    சரக்கொன்றை மர விதையை நன்றாக அரைத்து வலி உள்ள இடத்தில் பற்று போட வேண்டும்
    அத்தி மரத்திலிருந்து பாலை எடுத்து வலி உள்ள இடத்தில் பத்து போடவும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    1 comments:

    இனியன் said... October 1, 2012 at 1:21 PM

    உங்க பதிவ நகலெடுக்க முடியவில்லை தயவுசெய்து காப்பி செய்கிறமாதிரி பதிப்பித்தால் வசதியாக இருக்கும்.

    Item Reviewed: மூட்டு வலி குறைய .இய‌ற்கை வைத்திய குறிப்புக்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top