பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் என்ற நோய் பற்றிய தகவல்களும் அதற்கான தீர்வுகளும். - தமிழர்களின் சிந்தனை களம் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் என்ற நோய் பற்றிய தகவல்களும் அதற்கான தீர்வுகளும். - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Friday, September 20, 2013

  பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் என்ற நோய் பற்றிய தகவல்களும் அதற்கான தீர்வுகளும்.

  பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது. கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு தினரும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம்.


  மெனோபாஸ்

  45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.

  பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.

  அறிகுறி �

  1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும். (ஹாட்ஃபாளஷ்).

  2. திடீரென வியத்துக் கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும் வியர்க்கும்.

  3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாற்க்கொண்டே இருக்கும்.

  4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.

  செய்ய வேண்டியது

  1. ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வது அவசியம்.

  2. கால்சியம் சத்து குறைவதால் எழும்பு மெலியும் அபாயம் உள்ளது.

  3. சரியான உணவுப்பழக்கம் இருந்தாலே மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பல பிரட்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

  4. கொழுப்பு நீக்கப்பட்ட பாலால் ஆனா தயிரை தினந்தோறும் சேர்க்க வேண்டும்

  5. சாப்பாட்டில் எள் நிறைய சேர்க்க வேண்டும்.

  6. பச்சை காய்கற்கள், பழங்கள் சேர்ப்பது நலம்

  7. கைக்குத்தல் அரிசியும், கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுகளும் பல குறைபாடுகளை தீர்க்கும்.

  8. கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்த்து 45 நிமிடங்கள் மாலைவேளையில் நடந்தால் 90 சதவீத மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்களை தவிர்க்கலாம்.

  9. கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.com/t40137-topic#ixzz2fOPekM9I
  Under Creative Commons License: Attribution
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் என்ற நோய் பற்றிய தகவல்களும் அதற்கான தீர்வுகளும். Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top