அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..! - தமிழர்களின் சிந்தனை களம் அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, December 3, 2013

    அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..!

    அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..!

    கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை,என்ற வேறு பெயர்களும் உண்டு. இருந்தாலும் "ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர் தான் முன்பு அனைவருக்கும் தெரிந்த பெயராக இருந்து வந்துள்ளது.

    இம் மூலிகை காடுகள்,வனங்களில், மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச் சையாக வளரும் கொடி இனமாகும்.சுமார் 40 - 50 வருடங்க ளுக்கு முன்பு குருவிக்காரர்கள் காடு, மலைகளுக்குச் சென்று இக் கிழங்கை சேகரித்து கொண்டு வந்து நாடு , நகரங்களில் கூவி கூவி விற்பார்கள்.

    நிலத்தில் பூமியின் அடியில் விளையும் கிழங்கு வகையான இம் மூலிகை கிழங்கிற்கு ஏன் ஆகாயத்தில் பறக்கும் கருடனின் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள்.?

    பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும்.

    இம் மூலிகைக் கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும்.

    உண்மையில் ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது. "சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது . இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.

    இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

    ஆகாச கருடன் கிழங்கின் மருத்துவ பயன்கள் :-

    இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும்,உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் மேற் பார்வையில் உண்ணுதல் வேண்டும். இது அதிக கசப்பு சுவை கொண்டது.

    சிறப்பாக பாம்பு விஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில் முறியும்.பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை காயளவு தின்ன கொடுக்க இரண்டு தடவை வாந்தியும், மலம் கழியும் உடனே விஷமும் முறிந்து விடும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: அதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு..! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top