சரும பள பளப்பிற்கான -சித்த மருந்துகள் - தமிழர்களின் சிந்தனை களம் சரும பள பளப்பிற்கான -சித்த மருந்துகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, February 16, 2011

    சரும பள பளப்பிற்கான -சித்த மருந்துகள்

    1 . குக்கில் நெய்
    (அ). அரிசித்திப்பிலி
    கண்டத்திப்பிலி
    செவ்வியம்
    சித்திரமூல வேர்ப்பட்டை
    பொன்முசுட்டை
    சீந்தில் கொடி
    சுண்டை வேர்
    வில்வ வேர்
    ஆடாதோடை வேர்
    இஞ்சி
    பேய்ப்புடல்
    கண்டங்கத்தரி
    வேப்பம் பட்டை
    கறுவேலம் பட்டை
    ஆயில் பட்டை
    புங்கம் பட்டை
    சரக்கொன்றைப் பட்டை
    கோரைக்கிழங்கு
    ஆடுதீண்டாப்பாளை வேர்ப்பட்டை
    செங்கடுக்காய்த் தோல்
    கொத்துமல்லி விதை
    தேவதாரம்
    வசம்பு
    முட்கா வேளை வேர்

    ஆகிய இவற்றை வெயிலில் காயவைத்து இடித்தது வகைக்கு 7 1/2 பலம்.


    இவற்றை ஒரு பாண்டத்தில் இட்டு, 16படி நீர் விட்டு எட்டில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

    (ஆ). பசு நெய் 1 படி
    பால் 1/2 படி

    (இ). சீனாக்காரம்
    சிறுநாகப்பூ
    மேல் தோல் சீவின சுக்கு
    மிளகு
    திப்பிலி
    தேவதாரம்
    கடுக்காய்த் தோல்
    தான்றித்தோல்
    நெல்லிமுள்ளி
    சவுக்காரம்
    சத்திச்சாரம்
    கோஷ்டம்
    வசம்பு
    இலவங்கப்பத்திரி
    கொடிவேலி வேர்ப்பட்டை
    கண்டத்திப்பிலி
    கையாந்தகரை
    கடுகுரோகணி
    சாறணைக் கிழங்கு
    பூமி சர்க்கரைக் கிழங்கு
    அதிவிடயம்
    பொன்முசுட்டை வேர்
    வெண் கடுகு
    சடாமாஞ்சில்
    பெருங்குரும்பை
    யானைத் திப்பிலி
    பெருங்காயம்
    ஓமம்
    இந்துப்பு
    வளையலுப்பு
    வெடியுப்பு
    கல்லுப்பு
    பெருமரப்பட்டை - இவை வகைக்கு 1 வராகன் எடை.


    இவைகளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்துக் கொள்ளவும். சுத்தி
    செய்த குக்கி 5 பலம் எடுத்து இடித்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும்
    சேர்த்து அம்மியில் வைத்துப் பாலைச் சிறுகச்சிறுகத் தெளித்து வெண்ணெய் போல்
    அரைத்து வைத்துக் கொள்ளவும்.


    செய்முறை: (அ) வில் உள்ள குடிநீருடன் (ஆ) வில் உள்ள நெய்யையும்,
    பாலையும் கலந்து (இ) யில் சொன்னபடி சித்தப்படுத்தினதைக் கரைத்து
    அடுப்பேற்றி 5 நாள் வரையில் மந்தாக்கினியாக எரித்துக் காய்ச்சிக் கடுகு
    திரள் பதத்தில் இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து வாய்பந்தனம்
    செய்து 1 வாரம் வரை தானிய புடம் வைத்துப் பின் உபயோகிக்கவும்.


    அளவு: 1 வராகனெடை, காலை மாலை இரண்டு வேளை உபயோகிக்கலாம்.


    அனுபானம்: தேன், சர்க்கரை, வெண்ணெய் முதலியன.

    தீரும் நோய்கள்:
    21 வகை பிரமியம்
    பிளவை
    எண்வகைக் குன்மம்
    விப்புருதி
    கொங்கைக் குத்து
    கண்டமாலை
    கை கால் முடக்கு
    உடலில் கருப்பு முதலியன நீங்கும்.


    பத்தியம்: புளி, புகை, கசப்பு, நல்லெண்ணெய், கடுகு, மீன்,
    கருவாடு, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பூசணிக்காய், பறங்கிக்காய்,
    தேங்காய் இவை ஆகா. இச்சாபத்தியம்.

    நன்றி -plantinfocenter
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சரும பள பளப்பிற்கான -சித்த மருந்துகள் Rating: 5 Reviewed By: Unknown