சுவாச நோய்க்கான சித்த மருந்துகள் - தமிழர்களின் சிந்தனை களம் சுவாச நோய்க்கான சித்த மருந்துகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, February 16, 2011

    சுவாச நோய்க்கான சித்த மருந்துகள்


    1 . மகாவில்வாதி லேகியம்
    வில்வத்தின் வேரை நூறுபலம் எடுத்துக் கொண்டு இதனுடன்
    விலாமிச்சை
    நிலவாகை
    பாதிரி
    நன்னாரி
    பருவிளா
    சிற்றாமல்லி
    பேராமல்லி
    சிறுவிளாவேர்
    சிறுவாகை
    முன்னை
    முசுமுசுக்கை
    கொடிவலி
    தேற்றான் விரை

    போன்றவைகளை வகைக்கு மூன்று பலமெடுத்து நன்டாக இடித்து கொண்டு தூணியளவு
    உள்ள நீரில் போட்டுக் காய்ச்சி எட்டுக்கொரு பங்காய் வடித்துக் கொண்டு
    இதனுடன் கொம்மட்டி பழச்சாறும் வகைக்கு ஓரு படியும் நான்கு சேர்
    சர்க்கதையுங் கூட்டி இரண்டு படி ஆவின் பாலும் விட்டு நன்றாய்க் கரைத்து
    பாகு பதமாகும் வரை காய்ச்சி பிறகு


    சுக்கு
    மிளகு
    திப்பிலி
    கடுக்காய்
    நெல்லிக்காய்
    தான்றிக்காய்
    லவங்கம்
    ஏலம்
    கோஷ்டம்
    அதிமதுரம்
    கெந்தமாஞ்சில்
    கருஞ்சீரகம்
    வெண்சீரகம்
    வாய்விலங்கம்
    சகஸ்திரபேதி
    தாளிசபத்திரி
    செண்பகப்பூ
    அக்கிரகாரம்
    மல்லி
    விளா
    கார்போக அரிசி
    தேக்கு
    முந்திரி
    பேரீச்சம்
    வில்வம்
    வாளுவையரிசி
    சிறுநாகம்
    நாகணம்
    பருத்திவிரை
    வேப்பன்விரை
    இர்லுப்பைப்பூ.

    போன்றவைகளை வகைக்கு ஓரு பலமெடுத்து முன்கிளறி வைத்துள்ள பாகில் தூவி
    தேனும், நெய்யும் வகைக்கு அரைபடிவீதம் விட்டுக் கிண்டி, மெழுகுபதமாக
    கிளறிக் கொண்டு பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.


    அளவு: காலை மாலை இருவேளை புன்னைக்காய் அளவு வீதம் உட்கொண்டு

    தீரும் நோய்கள்.
    சுவாசகாசம்
    அரோசகம்
    வீக்கம்
    உடம்பு எரிவு
    விஷப்பாண்டு
    வயிற்றெரிச்சல்
    உப்பசம்
    கிராணி
    எரிபாண்டு
    கைகாலெரிவு
    காந்தல்
    வாந்தி
    ஓக்காளம்
    அன்னதோஷம்
    சூலை
    எட்டு வகையான சயங்கள்
    அறுபத்து நான்கு வகையான சுரங்கள்
    நாற்பது வகையான பித்தங்கள்
    அஸ்திசுரம்
    அதிசாரம் முதலியன தீரும்.

    நன்றி -plantinfocenter

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சுவாச நோய்க்கான சித்த மருந்துகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top