கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப்பூக்கள் Post - தமிழர்களின் சிந்தனை களம் கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப்பூக்கள் Post - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, November 4, 2011

    கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப்பூக்கள் Post



    கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப்பூக்கள்

    ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 30, 2011,

    உடலுக்கு சக்தி தரும் எள் போல எள்ளுச்செடியின் மலர்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளது.

    தூய வெண்மை நிறம் கொண்ட எள்ளுப்பூக்கள் அழகிய வடிவம் கொண்டவை. சங்க காலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை எள்ளுப்பூக்களை பெண்களின் நாசிக்கு ஒப்பிடுகின்றனர். எள்ளுச்செடிகளில் புதிதாக பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.

    மங்கலான பார்வை தெளிவடையும்

    எள் செடியில் இருந்து பூவைப் பறித்து பற்களில் படாமல் விழுங்கிவிட வேண்டும். ஒவ்வொன்றாக விழுங்க முயற்சி செய்ய வேண்டும். மொத்தமாக அள்ளிப் போடக்கூடாது. ஒரே நேரத்தில் ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடங்களுக்கு கண் வலி வராது. மங்கலான பார்வை தெளிவடையும்.

    கண்களில் பூ விழுந்தவர்களுக்கு

    பேரிச்சம்பழக்கொட்டையும், மான் கொம்பின் ஒரு பகுதியையும், தாய்பாலில் இழைத்து அத்துடன் எள் பூவையும் கசக்கி இழைத்து சேர்த்து கண்களில் மை போல போட்டு வர, பூ விழுந்ததால் பார்வைக்குறைவு வந்தவர்கள் குணம் பெறுவார்கள்.

    கண் எரிச்சல், கண் பார்வை மந்தம் உள்ளவர்கள்

    கைப்பிடியளவு எள்ளுப்பூவை ஒரு சட்டியில் போட்டு பதமாக வதக்கி சூடு ஆறியதும், கண்கள் மீது வைத்துக் கட்டி விட வேண்டும். இதைப் படுக்கப் போகும் போது செய்யவும். காலையில் அவிழ்த்து விட வேண்டும். குணம் கிடைக்கும் வரை இதனை தொடர்ந்து செய்யவும். எள்ளுப்பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட தேன் உடலுக்கு பலத்தை தரும்.


    thatstamil
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கண் பார்வையை தெளிவாக்கும் எள்ளுப்பூக்கள் Post Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top