சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் - தமிழர்களின் சிந்தனை களம் சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, February 3, 2012

    சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

    சீனி விஷத்தன்மை வாய்ந்ததென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சிகரட், மதுபானவகைகள் போன்று இதனையும் கட்டுப்படுத்த வழிசெய்யவேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 


    இதனைக்கட்டுப்படுத்த அரசு வரிவிதித்தல் உட்பட பல சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமெனவும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர். 

    சீனி சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் உடல் எடை அதிகரித்தல், இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களுக்குக் காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

    இது உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 35 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

    இது தொடர்பில் 'The Toxic Truth About Sugar' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 

    அக்கட்டுரையில் போசணைக்குறைபாட்டை விட உடற்பருமன் அதிகரிப்பானது மிகப் பெரும் சவாலாக உள்ளதாகவும் இதில் சீனி முக்கிய பங்கு வகிப்பதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். 

    அது மட்டுமன்றி சீனியானது மனித உடலின் வளர்சிதை மாற்றத்தினைப் (Metabolism) பாதிப்பதுடன், ஹோர்மோன்களின் சீரற்ற சுரப்புக்கும், உயர் குருதி அமுக்கத்துக்கும் காரணமாக அமைவதாக அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சீனி விஷத்தைப் போன்றது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top