கர்ப்பக் காலத்தில் உறவு வைத்துக்கொள்ளலாமா? - தமிழர்களின் சிந்தனை களம் கர்ப்பக் காலத்தில் உறவு வைத்துக்கொள்ளலாமா? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, February 5, 2012

    கர்ப்பக் காலத்தில் உறவு வைத்துக்கொள்ளலாமா?




    * கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்பே சொல்லியிருப்பது இதற்கும் பொருந்தும்.

    * கரு, கருப்பையில் சரியாகப் பொருந்தியிருக்காது என்பதால் அந்த நேரத்தில் அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் நிறைய. செக்ஸ் வைத்துக் கொள்வ தால்கூட சில சமயங்களில் அபார்ஷன் ஆகலாம். அதனால் முதல் மூன்று மாதங்களில் அந்த உறவு வேண்டாமே.

    * அதேபோல், ஒன்பதாவது மாதத்திலும் தாம்பத்ய உறவைத் தவிர்த்துவிடுங்கள். இன்பெக்ஷன்’ ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது.

    * எந்த பிரச்னையும் இல்லாமல் நார்மலான கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் என்றால் அதிக அலட்டல் இல்லாமல் உறவு வைத்துக்கொள்ளலாம்.

    * கருப்பையில் கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஏற்படும் பெண்கள், கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது. அப்படிப்பட்ட பெண்கள், பிரசவம் வரையிலுமே தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது.

    *மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல.

    * மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை அழுத்தும்.

    * இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் ‘பி.பி’ இறங்கும். அதனால்
    தலைசுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்க்கும், சேய்க்கும் நலம்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கர்ப்பக் காலத்தில் உறவு வைத்துக்கொள்ளலாமா? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top