usetamil.net |
கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வு ஒன்று சொல்கிறது. ஏனெனில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதால், அவை வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். வேண்டுமெனில், மாத்திரைகளுக்கு பதிலாக வேறு கருத்தடைப் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை தவிர்க்கலாம்.
வீட்டில் இருக்கும் பெண்களை விட, நைட் ஷிப்ட் செல்லும் பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் நைட் ஷிப்ட் செல்வதை தவிர்ப்பது நல்லது.
பிரா அணிவதாலும் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக, ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார். அதிலும் நாள் முழுவதும் பிரா அணிபவர்களுக்கு தான், மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார். ஆகவே தினமும் இரவில் படுக்கும் போது, பிராக்களை அணியாமல் இருந்தால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.
உறவு வாய்வழி உறவு கொண்டால் தொண்டை புற்றுநோய் வருவதாக, ஆராச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிலும் அந்த ஆய்வில் அவ்வாறு உறவு கொள்ளும் போது, பாபிலோமாவைரஸ் என்னும் தொண்டை புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் ஊடுருவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்வழி உறவினால் ஏற்படும் தொண்டை புற்றுநோய், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ஏற்படும்.
பெண்கள் தொடர்ச்சியாக ஹேர் டை அடித்து வந்தால், அவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 15 வருடங்களாக ஹேர் டை பயன்படுத்தினால், மூன்று மடங்கு அதிகமாக புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாகவும், அந்த ஆய்வு சொல்கிறது.
சன் ஸ்க்ரீன் க்ரீம்களை அதிகம் சருமத்தில் பயன்படுத்தினால், தோல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் எவ்வளவு தான் அவை சருமத்தினை பாதுகாத்தாலும், புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை முற்றிலும் தடுப்பதில்லை என்றும் சொல்கிறது.
தினமும் முகத்திற்கு போடும் பவுடர் முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டாலும், 40 சதவீதம் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று சொல்கிறது.
பல மில்லியன் பெண்கள் தினமும் மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவ்வாறு மாய்ஸ்சுரைசரைப் பயன்ழுடுத்தினால் தோல் புற்றுநோய் வரும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t39253-topic#ixzz2dVWosSHt
Under Creative Commons License: Attribution
0 comments:
Post a Comment