கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சில வலிகள்! - தமிழர்களின் சிந்தனை களம் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சில வலிகள்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, August 31, 2013

  கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சில வலிகள்!

  அனைத்து கர்ப்பிணிகளும் பயப்படும் ஒரே வலி என்றால் அது பிரசவ வலி தான். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது இருந்தே, கர்ப்பிணிகள் பல்வேறு வலிகளை சந்திக்ககூடும்.

  அத்தகயை வலிகள் அனைத்து கடுமையாகவும், தொந்தரவு தரக்கூடியதாகவும் இருக்கும். இந்த மாதிரியான வலிகளுக்கு பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்த வலிகள் ஒவ்வொரு மாதமும் வித்தியாசமான வலிகளைக் கொடுக்கும். சொல்லப்போனால், இந்த வலிகள் ஒவ்வொரு மாதமும் கடுமையானதாக இருக்கும். எனவே கர்ப்பமாக விரும்புபவர்கள், அத்தகைய வலிகள் என்னவென்று முன்பே தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல், தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.  கர்ப்பம் மற்றும் முதுகு வலிக்கு நிறைய சம்பந்தம் இருக்கும். ஆம், கர்ப்பத்தின் ஒவ்வொரு நிலையின் போதும், குழந்தை வளர்ச்சியடைவதால், வயிறானது பெரிதாக பெரிதாக, அதனை தாங்கும் முதுகில் வலியானது அதிகரித்துக் கொண்டே இருக்கும். இத்தகைய வலியை பிரசவம் முடியும் வரை சந்திக்கக்கூடும்.  முதல் மூன்று மாதத்தில் அடிக்கடி தலை வலியானது ஏற்படும். அதிலும் மதிய நேரத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் மதிய வேளையில் கர்ப்பிணிகளின் உடலில் சர்க்கரையின் அளவானது குறைவதால், தலைவலியானது ஏற்படுகிறது. எனவே இதனை சரிசெய்ய அவ்வப்போது இனிப்புகளை சாப்பிட்டு, நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.  கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் மிகவும் மோசமான வலி என்றால் அது கால் வலி தான். இத்தகைய கால் வலியின் ஆரம்பத்தில் அடிக்கடி கால்களில் பிடிப்புகள் ஏற்படும். பின் உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க கால்களில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.  கர்ப்பிணிகளுக்கு பாதங்கள் வீங்குவது என்பது பொதுவானது. ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது நீரானது பாதங்களில் அதிகம் தங்குவதால், அவை பாதங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இக்காலத்தில் இரத்த ஓட்டமானது பாதி உடலுக்கு மட்டும் தான் ஓடும். இதனால் அந்த வலியானது நடக்க முடியாமல் செய்வதோடு, எப்போதும் ஓய்வு எடுக்கத் தூண்டும்.

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.usetamil.net/t39250-topic#ixzz2dVUo4Q8V 
  Under Creative Commons License: Attribution
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சில வலிகள்! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top