பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் யார் யார் இதை உண்பதை தவிர்க்க வேண்டும்..! - தமிழர்களின் சிந்தனை களம் பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் யார் யார் இதை உண்பதை தவிர்க்க வேண்டும்..! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Tuesday, August 19, 2014

  பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் யார் யார் இதை உண்பதை தவிர்க்க வேண்டும்..!

  பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் யார் யார் இதை உண்பதை தவிர்க்க வேண்டும்..!

  பீர்க்கங்காய் உடலுக்கு குளிர்ச்சி என்று நாம் அனைவரும் அறிந்ததே!
  பீர்க்கங்காய் கொடி இனத்தை சார்ந்தது.அதாவது இக்காய் சுரைக்காய், பாவக்காய், புடலங்காய் போன்றது.

  மேலும் சில தகவல்கள்

  1. பீர்க்கங்காய் நீர்ச்சத்தும், தாது உப்புகளும் கொண்டது.

  2. பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும்.

  3. இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும்.

  4. வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.

  5. பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.

  6. பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும்
  உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

  7. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

  8. ரத்த சோகை நோய் உள்வர்கள் இரும்புச் சத்து நிறைந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

  9. அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய்,
  பீட்ரூட், முட்டைகோஸ், முருங்கைக்காய், காலி·பிளவர் போன்ற காய்கறிகளிலும்,
  எல்லா வகை கீரைகளிலும், எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை போன்ற
  பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது.

  யார் யார் இதை தவிர்கனும்:

  10. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் யார் யார் இதை உண்பதை தவிர்க்க வேண்டும்..! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top