பழையசோறு... பச்சை மிளகாய்... சர்க்கரைநோயை அதிகப்படுத்துமா - தமிழர்களின் சிந்தனை களம் பழையசோறு... பச்சை மிளகாய்... சர்க்கரைநோயை அதிகப்படுத்துமா - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Wednesday, August 20, 2014

  பழையசோறு... பச்சை மிளகாய்... சர்க்கரைநோயை அதிகப்படுத்துமா

  மதுரை: 'பழைய சோறு...தொட்டுக் கொள்ள வெங்காயம், பச்சைமிளகாய் மட்டும் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கலாம்,' என்கின்றனர், மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்.அரசு மருத்துவமனையில் தினமும் பத்தாயிரம் புறநோயாளிகள், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வருகின்றனர். ஆயிரம் நோயாளிகள் வந்து செல்லும் ஒரே துறை, சர்க்கரை நோய்ப் பிரிவு. தினமும் 200 நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி போடப்படுகிறது. புதுநோயாளிகள் 60 பேர் தினமும் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.

  இதுகுறித்து, சர்க்கரை நோய் நிபுணர்கள் கூறியதாவது:குழந்தைகளைத் தாக்கும் 'டைப் 1' வகை சர்க்கரையானது உலகம் முழுவதும் ஒரே அளவாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் 1000 குழந்தைகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், மற்றவர்களைத் தாக்கும் 'டைப் 2' சர்க்கரை நோய் பொதுவாக உள்ளது.ஐந்தாண்டுகளாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் பாதிக்கப்படுகின்றனர். சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின், ரத்தத்தில் சர்க்கரை அளவு 200, 250 என்ற நிலையில் தான் இருந்தது. தற்போது 40 வயதினர் கூட, அதிகபட்சமாக 500, 600 அளவுடன் வருவது அதிர்ச்சியாக உள்ளது. நோயாளிகளின் உணவுப் பழக்கங்களை ஆய்வுசெய்தபோது, சர்க்கரை அதிகரிப்பதற்கான காரணம் புரிந்தது.கிராமங்களில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  கடுமையான உடல்உழைப்புள்ளவர்கள், விவசாயிகளாக உள்ளனர். தண்ணீர் ஊற்றிய பழைய சோறு, தொட்டுக்கொள்ள வெங்காயம், பச்சைமிளகாய் மட்டுமே சாப்பிடுகின்றனர். பருப்பு, பயறு வகைகள், முட்டைகளை சாப்பிடுவதில்லை. இவர்களைப் பொறுத்தவரை புரதம் என்றால், என்றோ ஒருநாள் சாப்பிடும் அசைவத்தை மட்டும் நினைக்கின்றனர். இந்த உழைப்புக்கு தினமும் பயறு, பருப்புகளை உணவில் சேர்த்தால் தான் உடலில் புரதம் சேரும்.இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. சாதம் மட்டும் சாப்பிடாமல் கோதுமை, பயறு, பருப்பு, முட்டை மற்றும் சரிவிகித உணவை சாப்பிட வேண்டும், என்றனர்.

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t48178-topic#ixzz3AqpoVjKe 
  Under Creative Commons License: Attribution
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: பழையசோறு... பச்சை மிளகாய்... சர்க்கரைநோயை அதிகப்படுத்துமா Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top