தண்ணீரின் அவசியம் - தமிழர்களின் சிந்தனை களம் தண்ணீரின் அவசியம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, January 23, 2011

    தண்ணீரின் அவசியம்

    மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது,
    திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற
    பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது.

    நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை
    உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில்
    15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம்.

    உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.
    உடலின் அனைத்து திசுக்களுக்கும், ரத்தத்தின் அடிப்படைக்கும், ட்டு இணைப்புகளில் உள்ள திரவம், கண்ணீர்,
    கோழை வடிதல் போன்றவற்றுக்கும் தண்ணீரே காரணமாகத் திகழ்கிறது. உடல் உறுப்புகள் முறைப்படி செயல்படுவதற்கு
    உராய்வு எண்ணெய் போன்று தண்ணீர் செயலாற்றுகிறது.

    நம்முடைய தோலினை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக் கொள்வதற்கும் உடலில் உள்ள தண்ணீரே பங்காற்றுகிறது.
    வயது முதிர்வடையும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உடலில் உள்ள தண்ணீரின் அளவு குறைவதே காரணம்.
    ஆகவேதான் பிறக்கும் குழந்தைகளின் உடல்களில் சுமார் 75 முதல் 80 சதவீதம் அளவிற்கு தண்ணீர் இருப்பதால்
    அவர்களின் தோல் மென்மையானதாகக் காணப்படுகிறது. அதுவே 65 70 வயதான முதியோருக்கு உடலில்
    தண்ணீர் 50 சதவீதமாகக் குறைவதால் சுருக்கங்கள் காணப்படுகிறது. தண்ணீர் குறைவின் காரணமாகவே
    எலும்பு இணைப்புகளில் பாதிப்பு ஏற்படுவதும் முதுமையில் நிகழ்கிறது.

    மனித உடலுக்கு அன்றாடம் சராசரியாக 6 முதல் 8 டம்ளர் வரையிலான தண்ணீர் தேவையாகிறது.
    உடலிலுள்ள நீர் எப்படி முறைப் படுத்தப்படுகிறது?

    உங்கள் இல்லங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது, அவசியமான காரியங்கள் எவையெனப்
    பகுத்துப் பார்த்துத்தானே காரியமாற்றுவீர்கள்.

    உதாரணமாக, குடிப்பதற்கும் சமையலுக்கும் முதற்கட்ட முன்னுரிமை கொடுத்துப் பின், குளிப்பதற்கும்,
    கழுவுவதற்கும் தண்ணீரைக் குறைத்துத்தானே நீங்கள் பயன்படுத்துவீர்கள். அதைப் போலவே, குறைந்த தண்ணீரைச்
    சரீரம் பெறும்போது, எல்லா உயிரணுக்களிலும் அடங்கியுள்ள ‘ஹிஸ்டாமின்’ என்ற வேதியியல் சேர்க்கை,
    உடனடியாகவே ஒரு நீரமைப்பை உருவாக்கிக் கொள்ளும். இந்த அமைப்பு, உடலில் உள்ள அவயங்களுக்கு
    முன்னுரிமை அளித்து அதாவது, இதயம் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு நீரை விநியோகம் செய்யும்.

    ஹிஸ்டாமின், நரம்பியல் செய்தி சாதனம் என்றொரு வேதியியல் முறையினை இயக்குகின்றது. இந்த வேதியியல்
    பொருட்கள், நரம்பு மண்டலங்களில் உந்தும் சக்திகளை மாற்றி அமைத்தோ அல்லது உள்ளே அனுப்பி வைப்பது போன்ற
    வேலைகளைச் செய்யும். அதேபோல் இந்தச் சாதனம், தண்ணீரை உள்ளே எடுப்பதையும் முறைப்படுத்தும் துணை
    அமைப்புகளையும் இயல்பாகச் செய்கின்றன.

    வாசோபிரஸ்ஸின் என்பது ஒரு உட்சுரப்பியாகும். இது சிறுநீரகங்கள் உள்வாங்கும் தண்ணீரைக் கூடுதலாக்கும் வேலையைச் செய்கின்றன.
    சிறுநீர் உற்பத்தியைக் குறைக்கச் செய்துவிடும். ரெனின் என்பது (ஒருவகை செரிமானப் பொருளாகும்.) என்சைம் ஆகும்.
    இது சிறுநீரகங்களில் சேமித்து வைக்கப்படுபவையாகும். எப்பொழுதெல்லாம் இரத்த அளவு குறைகிறதோ அப்போதெல்லாம்
    இந்த ரெனின் தொடர்ச்சியான இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, ஒரு இரசாயனப் படிவத்தை உற்பத்தி செய்கின்றன.
    இதுவே ஆஞ்சியோசென்சன் என்பதாகும். இந்த ஆஞ்சியோசென்சன், சிறுநீரகங்கள் வடிகட்டும் இரத்த விகிதாச்சாரத்தைக்
    குறைக்கச் செய்கின்றன. இப்படி குறைத்து வடிகட்டியதன் விளைவால், தண்ணீரை மேலும் தக்க வைக்க அது உடலுக்கு உதவி செய்கின்றன.

    வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில், உடம்பின் நீரோட்டம் ன்று நிலைகளில் இயக்கப்படுகின்றன. அவை, ஒன்று —
    பிறப்பிற்கு முன்; அடுத்து பிறந்ததற்கும் பருவ வயதை அடைவதற்கும் இடையில் வாலிபப் பருவ காலத்தில்.
    ஜனனத்திற்கு முன்பு, உலகம் காணாத குழந்தை, தனது வளர்ச்சிக்காகக் கூடுதல் தண்ணீர் தேவையெனக் கருதும்போது,
    தனது தாய்க்கு உரிய அறிவிப்புகளை சைகைகளை அனுப்பி வைக்கும். அப்படியொரு சைகை வராமல் இருந்தால் கூட,
    பேபியின் தேவையை தாயாரே அனுபவித்து, உணர்ந்து கொள்வார். கருவுற்ற தாயாருக்கு காலையில் ஏற்படும் உடல் கோளாறுகளுக்கு,
    தனக்கான கூடுதல் நீர்த் தேவையின் அடையாளத்தினை, வெளிவராத பேபி காட்டும் அறிகுறிதான் இது.

    தண்ணீர் விநியோகத்தின் மேம்பாட்டுத் தன்மை, இருபதாம் வயதில்தான் உடலின் உச்சகட்டத்தை அடைகின்றது.
    பின்னர் இது படிப்படியாக இறங்குமுகமாகவே வாழ்க்கையில் இருக்கிறது. எனவே வயது ஏறும்பொழுது, தாக உணர்வும்
    காலமுறையாக தணிந்து கொண்டே இருக்கும். இதனால்தான் வயதான காலத்தில், ஒருவேளை போதிய தண்ணீர் எடுக்காத
    காரணத்தினால் தான், உயர் இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி போன்ற நோய்கள் தாக்கத் தொடங்குகின்றன. தேநீர், காபி, மது,
    கரியமில வாயு கலந்த பானங்களை நீங்கள் வழக்கமாக உட்கொள்வதால், வாழ்வின் கடைசிப் பகுதியில், உடலின் நீரோட்டத்தை
    வெகுவாகவே பாதிக்கச் செய்துவிடுகின்றன.

    உடலின் பல்வேறு அவயங்களில் காணப்படும் திசுக்களின் உள்ளேயும் உள்ள தண்ணீரின் விகிதாச்சாரம் மிக முக்கியமானதாகும்.
    வயது கூடும் போதெல்லாம் திசுக்களின் தண்ணீர் கொள்ளளவு குறைந்து கொண்டே போகும்.

    ஒவ்வொரு திசுவிலுள்ள தண்ணீரும் வழக்கமான வேலையினை நெறிப்படுத்துவதில் சரியான பங்கை ஆற்றுவதால்,
    தண்ணீர் பற்றாக்குறை ஒரு சில வேலைகளைச் செயலற்றுப் போகச் செய்துவிடும். வேலைகள் முடங்கிப் போகும் போது,
    உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றிவிடும்.

    தண்ணீர் நல்ல மருந்து!

    எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே
    பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை
    அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும்
    அறிகுறிகளை நாம் காணலாம்.

    இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை
    வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது.
    எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.

    இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம்
    பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில்
    பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன.
    தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது. உடலின் மொத்த எடையில்
    தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும்,
    மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில்
    உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.

    நன்றி - senthilvayal
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: தண்ணீரின் அவசியம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top