குழந்தைகள் பிறந்தவுடன் நன்றாக வேகமாக அழ வேண்டும். அப்போதுதான், முதன்முறையாக தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்து வெளிக்காற்றை சுவாசிக்க முடியும். உடலும் சிவப்பு நிறமாக மாறும்.
குழந்தையின் முதல் அழுகை என்பது தன்னுடைய சுவாச முறையைத் தொடங்குவதற்காகவே இயற்கை ஏற்படுத்தியது. ஆனால், இந்த இயற்கையான நடவடிக்கைக்கு மாறாக வேறு பல காரணங்களால் குழந்தை அழலாம். அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டு சிகிச்சை அளித்தால், ஒருவேளை குழந்தைக்கு வேறு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.
சில காரணங்களை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
பசிக்கும்போது அழலாம்.
வயிற்றில் இருந்து காற்று வெளியேறும் போது அழலாம்.
துணியால் உடல் மூடப்படாமல் கதகதப்பு இல்லாமல் இருந்தால் அழலாம்.
சில குழந்தைகள், விளக்கை அணைத்தால் அழத் தொடங்கும்.
சில குழந்தைகள், விளக்கைப் போட்டால் அழும்.
எல்லாக் குழந்தைகளும், கை கால்கள் மற்றும் கழுத்துப் பகுதியை கெட்டியாக அழுத்திப் பிடித்தால் அழும்.
வேறு காரணங்கள்
கைக்குழந்தைகள்
பசி
தாகம்
வயிற்றில் காற்று
அரிப்பு
வயிற்று வலி
ஈரமான துணி
அதிக சத்தம்
மாட்டுப்பால் அலர்ஜி
பல் முளைக்கும் போது
சிறுநீர் கழிக்கும்போது
தனிமை
இவை தவிர,
1. நோய்த் தொற்று
2. தலைவலி
3. காது வலி
4. குடல் இறக்கம்
5. விறை முறுக்குதல்
6. குடல் அடைப்பு
போன்ற காரணங்களாலும் குழந்தை அழலாம்.
சிறுவர்கள்
1. ஆளுமை
2. பாதுகாப்பு இல்லாமை
3., பழக்கம்
4. பசி
5. களைப்பு
6. நோய்
7. மருந்துகள் ஏதாவது
8. அலர்ஜி
சிகிச்சை
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
பாலுக்காகத்தான் அழுகிறது என்றால், பால் கொடுத்தால் அழுகை நின்று விடும்.
குழந்தையைப் படுக்க வைத்திருக்கும் துணி நனைந்திருப்பதால் குழந்தை அழுகிறது என்றால், அந்தத் துணியை மாற்றிவிட்டால் அழுகை நின்றுவிடும்.
காது வலி போன்றவை இருந்தால், மருத்துவரிடம் காட்டி மருந்துபோட்டால் அழுகை நின்றுவிடும்.
1 comments:
nandrigal
Post a Comment