விபத்துகளிலேயே மிகவும் கொடியது நெருப்பில் சிக்கிக்கொள்வது தான் அவ்வாறு ஒருவர் நெருப்பில் சிக்கிக்கொண்டால் எவ்வாறு முதலுதவி செய்வது என்பதை தெரிந்துக் கொள்வோம்!
* ஒருவர் தமது அலுவலகத்தில் தீ விபத்தின் பொழுது சிக்கிக்கொள்கிறார் என்று கொள்வோம். கூடியவரை, புகை பரவாத ஒரு அறைக்குள் புகுந்துகொண்டு விட வேண்டும். முடியுமானால் ஈரமான துணி எதையாவது கதவுக்கடியில் தரையில் விரித்து புகை பரவுவதைத் தடுக்க முயலவேண்டும்
* உடைகளில் நெருப்புப் பிடித்துவிட்டால், நெருப்பு சிறிய அளவுள்ளதாக இருப்பின் தரையில் படுத்து உருளலாம்.
* வீடாக இருப்பின், கனத்த போர்வை, கம்பளி இவற்றைப் போர்த்துக் கொள்ளலாம். நெருப்பை அணைக்க முற்படுவீர்களானால் அது எந்த வகை நெருப்பு, அதாவது எதனால் உருவான நெருப்பு என்று அறிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
* நெருப்பை அணைக்கப் போராடுகையில், நீங்கள் வெளியேற வசதியாக நின்று கொண்டு முயற்சி செய்தல் வேண்டும். நெருப்பு அதிகம் பரவுவது போல் தோன்றினால், நீங்கள் வெளிவந்து விடுவது உத்தமம்.
* குறிப்பாக குழந்தைகள் பயமறியாதவர்கள் எனவே, அவர்கள் இத்தகைய விபத்தினை எளிதில் சந்திக்க நேரிடும். அவ்வாறு குழந்தைகள் நெருப்பு விபத்தில் சிக்கினால் அந்த வலியினை தாங்க கூடிய அளவுக்கு வலியற்றவர்களாக இருப்பர்கள்.
எனவே முடிந்தளவுக்கு குழந்தைகளை நெருப்பில் சிக்காமல் கவனித்துக்கொள்வது நல்லது. எனவே எந்த ஒரு விபத்தினையு வருமுன் காப்பது சிறந்தது.
0 comments:
Post a Comment