ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள். - தமிழர்களின் சிந்தனை களம் ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள். - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, September 14, 2011

    ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள்.

    http://www.human-body-facts.com/images/human-body-muscle-diagram.jpg 
    ஆக்கினை -: நெற்றி தலையில் அடிபட்டால் சிலேத்தும நோய், கண்பார்வை குறைவு, காது கேளாமை, ருசியின்மை நீர் தோஷமாகிய ஆஸ்துமா, சயனஸ், பைத்தியம், மண்டை ஓட்டில் அடிபட்டால் நீர் இறங்கும் தன்மை ஆகிய நோய்கள் உண்டாகும். குண்டலீனி யோக தவறாக செய்தாலும் நோய்கள் ஏற்படும்.(பஞ்சபூதங்களின் ஆகாயம் ஆகும்)

    விசுத்தி -; நெஞ்சுக்கு மேல் பகுதி அடிபட்டால் நுரையீரல் தாக்கப்பட்டால் சயரோகம், படபடப்பு, ஆஸ்த்மா, குனிந்தால் மூச்சு முட்டுதல், நடந்தால் மூச்சு வாங்குதல் அதிக கோபம் ஆகியவை தாக்கப்படும்.(காற்று தன்மையாகும்)


    அளாதகம் -: மேல் வயிற்றுப் பகுதி, பித்தப்பை, கல்லீரல் வீக்கம், வயிறு உப்பிசம், மஞ்சள் காமாலை, ஜீரணக்குறைவு, குடலுருஞ்சிபாதிப்பு, உடல் வீக்கம் முதலியவை ஏற்படும். (நெருப்பு தன்மையாகும்)

    மணிபூரகம் :- வயிற்றின் மத்திய பகுதியில் குடல் கிட்னி, நீரடைப்பு, கல்லடைப்பு வரும். (தண்ணீர் தன்மையாகும்.)

    சுவதிஷ்டானம் -: வாத சம்பந்தப்பட்ட நோய் பாதிப்பு ஏற்படும். (மண் தன்மை)

    மூலாதாரம் -: மூல நோய், சுக்கில நோய்கள் வரும். இதில் குண்டலீனி யோகம் செய்யும் யோகிகள் குரு மூலம் முறையாக இயக்கத் தெரியவில்லை எனில் மேற்குறித்த நோய்களில் மாட்டிக் கொள்வார்கள். மரணம்வரை வந்து விடும். நமது உடலில் தலையும் மூலாதரமும் வட தென் துருவமாகும். மூலத்தில் ஆடும் சப்தமும் உண்டாகும்

    குண்டலினி யோகம் செய்பவர்கள் பிராயணாமம் செய்கிறேன் என்று உடல் ஆரோக்கியமாக இருக்கும் உடலில் எந்த பிரச்சனையும் உண்டாகாது என அசட்டையாக இருகக்கூடாது
    இதனை முறையாக செய்யவில்லை எனில் சக்தி ஓட்டம் தவறாக ஓடினால் குடலை சுற்றி உள்ள மெல்லிய ஜவ்வு கிழிந்து சிறு குடல் இறங்கி விடும். இதை குடல் இரக்கம் என கூறுவார்கள்.

    யோக சக்திக்கேற்ப சாப்பாடு, எண்ணைய் குளியல் வேண்டும், அவ்வாறு செய்யாவிடில் குறி வழியாகவும் குதம் மூலம் வழியே கீளே வெப்பத்தை வீசும். விந்து வெளி வரும், மூலவியாதி தாக்கும். அதிக குளிரால் குறியை செயலிழக்க வைக்கும், குடல் சரியாக வேலை செய்யாது.

    எனவே ஆறு ஆதாரங்கள் முறையாக வேலை செய்ய வேண்டும் இவைகளில் வர்ம புள்ளி தாக்கப்பட்டால், செயலிழக்கவில்லை என்றாலும் மேற்கண்ட நோய்களால் பீடிக்கப் படும். இந்த நோய்களை குண்டலீனியின் சரியான இயக்கத்திலும், வர்ம மருத்துவரீதியாக குணப்படுத்த முடியும்.

    http://acuvarmatherphy.blogspot.com/2008/07/blog-post_29.html
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஆறு ஆதாரங்கள் பாதிப்பு ஏற்பட்டால் விளையும் விபரீதங்கள். Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top