கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்! - தமிழர்களின் சிந்தனை களம் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, May 24, 2012

    கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்!

    இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன.

    அவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
    ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு முடி கொட்டுவதை தவிர்க்கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன்றைக்கும் அந்த மூலிகைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
    பூந்திக்கொட்டை: நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான் நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.
    இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் கொடுக்கின்றன.
    வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்து கொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்து வரலாம்.
    உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
    இதை நீரில் கரைத்து சற்று நேரம் வைத்திருந்து பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.
    கரிசலாங்கண்ணி: கூந்தல் வளர்ச்சிக்கு கரிசலாங்கண்ணி சிறந்த மூலிகையாகும். இந்த மூலிகைத் தைலம் கேச வளர்ச்சிக்கு உதவுவதோடு கூந்தல் உதிர்தலை தடுக்கும்.
    முடிகளின் வேர்கால்களில் இந்த கூந்தல் தைலத்தை வைத்து மசாஜ் செய்வதன் மூலம் கூந்தல் வலுவடையும். உடல் குளிர்ச்சியடையும்.
    வெந்தயம்: கூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிறந்த மூலிகையாகும். வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரைத்து தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் தலைக்கு குளிர்ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மாறும்.
    மருதாணி: கூந்தலை கருமையாக்குவதில் மருதாணி சிறந்த மூலிகை. இது இளநரையை தடுக்கும். கூந்தலில் பொடுகு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர்கால்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.
    சோற்றுக் கற்றாழை: சோற்றுக்கற்றாழை சிறந்த மூலிகையாகும். கூந்தல், சருமம் போன்றவற்றினை பாதுகாக்க சிறந்த மூலிகையாக பயன்படுகிறது.
    சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக்கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்தலின் வறட்சியை போக்கி மென்மையாக்குவதில் சோற்றுக்கற்றாழை முக்கிய பங்காற்றுகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top