மச்சம் அதிகமா இருக்கா? நீங்கள் ஆரோக்கியமானவர்கள் � ஆய்வில் தகவல் - தமிழர்களின் சிந்தனை களம் மச்சம் அதிகமா இருக்கா? நீங்கள் ஆரோக்கியமானவர்கள் � ஆய்வில் தகவல் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Thursday, May 24, 2012

      மச்சம் அதிகமா இருக்கா? நீங்கள் ஆரோக்கியமானவர்கள் � ஆய்வில் தகவல்


      மச்சம் உடம்பில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள், அதுவும் மச்சம் முகத்தில் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது என்பர், ஆனால் மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். இது மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுகிறது, இதுவே மச்சம் ஆகும். இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும்.

      மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
      18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
      உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா? அப்ப அதிர்ஸ்டசாலி என்பதை விட நீங்கள் ஆரோக்கியசாலிதான்.
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: மச்சம் அதிகமா இருக்கா? நீங்கள் ஆரோக்கியமானவர்கள் � ஆய்வில் தகவல் Rating: 5 Reviewed By: Unknown