வயர்லெஸ் செயற்கை இருதயம் ஜப்பான் மருத்துவர்களால் கண்டுபிடிப்பு - தமிழர்களின் சிந்தனை களம் வயர்லெஸ் செயற்கை இருதயம் ஜப்பான் மருத்துவர்களால் கண்டுபிடிப்பு - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, May 13, 2012

    வயர்லெஸ் செயற்கை இருதயம் ஜப்பான் மருத்துவர்களால் கண்டுபிடிப்பு


    ஜப்பானின் தொஹோக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக் குழு வயர்லெஸ் தொழிநுட்பம் மூலம் கட்டுப்படுத்தப் படக் கூடிய செயற்கை இருதயத்தை கண்டு பிடித்துள்ளது.

    இந்த வயர்லெஸ் இருதயக் கண்டுபிடிப்பை அடுத்து, ஜப்பான் விஞ்ஞானிகளால் விரைவில்
    எந்த வித பேட்டரியும் இல்லாமல் உண்மையான இதயம் போல் செயற்படத்தக்க பொறிமுறையுடைய செயற்கை இருதயத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய சாத்தியக் கூறும் ஏற்படவுள்ளது என ஜப்பானின் அரச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

    வெறும் C பேட்டரியின் அளவேயுடைய இந்த செயற்கை இருதய பம்ப் உருளை வடிவான காந்தம் ஒன்றை இயக்குவதன் மூலம் மனிதனின் இயற்கையான இருதயத்துக்கு ஒப்பாக ஒரு நிமிடத்துக்கு 5 லீட்டர் வரை இரத்தத்தை பம்ப் பண்ணக் கூடியது. இந்த உபகரணத்தின் பம்ப் உடம்பின் தோலுக்கு மேலே பொருத்தப் படக்கூடிய இன்னொரு சிறிய உபகரணம் மூலம் உருவாக்கப் படும் காந்த சக்தியினால் இயக்கப் படுகின்றது.

    இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட செயற்கை இருதய உபகரணங்கள் மனித உடலில் இணைப்பதற்கு அளவில் மிகப் பெரியதாகவும் தோலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி போன்ற உபகரணத்துடன் மெல்லிய கம்பி அல்லது வயரினால் இணைக்கப் பட வேண்டிய தேவையும் இருந்தது.

    தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் செயற்கை இருதயம் மருத்துவ உலகில் மிக முக்கியமான ஒரு உபகரணமாகும். மிகச்சிறிய அளவுடையதும் சாதாரண கட்டமைப்பை கொண்டிருப்பதும் வினைத் திறன் மிக்கதுமான இந்த பம்ப் சந்தையில் மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதுமாகும் என இப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் இந்த ஆய்வுக்குழுவின் தலைவருமான கஷூஸி இஷியாமா கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: வயர்லெஸ் செயற்கை இருதயம் ஜப்பான் மருத்துவர்களால் கண்டுபிடிப்பு Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top