எலும்பு தேய்மானத்தை தடுக்க 3 விசேட உணவுகள் - தமிழர்களின் சிந்தனை களம் எலும்பு தேய்மானத்தை தடுக்க 3 விசேட உணவுகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, August 1, 2012

    எலும்பு தேய்மானத்தை தடுக்க 3 விசேட உணவுகள்

    எலும்பு தேய்மானத்தை தடுக்க 3 விசேட உணவுகள்
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD3uI_F0emaMr2gwecgPd7kdTRZ5sdaEE7SicFToa29vlpThwQsuNiALm2lyRRlZt8g9mTefy5WfurrlVgXYSChAr277iwchJGpwqi5oPCUaL073EaMsS1ht-jVbYkp235Ece-mWmTGrg/s1600/bone111.gif
    உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு பல காரணங்கள் உள்ளன.

    எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது. எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

    எலும்பு தேய்மானத்தை தடுக்க 3 விசேட உணவுகள் இங்கு தரப்படுகின்றன.

    பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்:

    பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

    ஓட்ஸ் குருமா:

    பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

    பிரட் தோசை:

    தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: எலும்பு தேய்மானத்தை தடுக்க 3 விசேட உணவுகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top