மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... - தமிழர்களின் சிந்தனை களம் மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, August 19, 2012

    மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க...

    மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க...
    http://www.dinakaran.com/Healthnew/H_image/ht1221.jpg
    உடலில் போதிய அளவு சத்துக்கள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி மயக்கம் வருவது போல் இருக்கும். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த உணர்வு அதிகம் ஏற்படும். அதிலும் அவ்வாறு மயக்கம் தெருக்களில் நடந்து செல்லும் போது, காரை ஓட்டும் போது என்ற நேரத்தில் தான் வரும். ஆகவே அவ்வாறு மயக்கம் வருவது போல் இருந்தால், அந்த நேரத்தில் என்னவெல்லம் செய்தால், மயக்க நிலை போகும் என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேட்டு, பின்பற்றுங்களேன்...

    * முக்கியமாக மயக்கம் வருவதற்கு உடலில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதே காரணமாக இருக்கும். அதிலும் சிலர் விரதம் இருக்க நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பார்கள். அந்த நேரத்தில் உடலில் எவ்வளவு நேரம் தான் சர்க்கரையில்லாமல் இருக்கும். ஆகவே இந்த நிலையில் வரும் மயக்கத்தை தடுப்பதற்கான ஈஸியான வழி வாயில் சிறிது சர்க்கரையை போட்டுக் கொள்வது. இவ்வாறு சர்க்கரை சாப்பிட்டால் மயக்கம் வருவதை தவிர்க்கலாம்.

    * இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதும் மயக்கம் வருவதற்கான காரணமாக இருக்கும். இது எப்போது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கிறோமோ, அப்போது இரத்த அழுத்தம் குறைவினால் மயக்கம் வரும். ஆகவே அப்போது உப்பை அல்லது உப்பு அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனெனில் உப்பு உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்.

    * வெளியே நீண்ட நேரம் வெயிலில் செல்லும் போது, சூரியன் உடலில் இருக்கும் எனர்ஜியை உறிஞ்சிவிடும். அதாவது உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்களை சூரியன் உறிஞ்சிவிடுவதால், உடலில் அப்போது ஒருவித பதட்டம் ஏற்படுவது போல் ஏற்படும். ஆகவே அப்போது எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை மற்றும் உப்பை கலந்து குடிக்க வேண்டும். இதனால் மயக்கம் ஏற்படாமல் இருக்கும்.

    * பெண்கள் அழகாக உடை அணிகிறேன் என்று உடலை இறுக்கும் வகையில் இருக்கும் ஆடையை அணிகின்றனர். அதனால் உடலில் சரியான இரத்த ஓட்டம் ஏற்படாமல், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து மயக்க நிலை உண்டாகிறது. அதுமட்டுமல்லாமல் நரம்புகள் வலுவிழக்கின்றன. ஆகவே அந்த நேரத்தில் மயக்கம் வருவது போல் இருந்தால், அப்போது மூச்சை இழுத்து விடவும், பின் இறுக்கமாக அணிந்திருக்கும் உடையை மாற்றிவிடவும். இதனால் மயக்க உணர்வு நீங்கும்.

    எனவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், மயக்கம் வராமல் தடுக்கும் வழிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top