மூட்டு வலி அதிகமாகுதா? திராட்சை ஜூஸ் குடிங்க! - தமிழர்களின் சிந்தனை களம் மூட்டு வலி அதிகமாகுதா? திராட்சை ஜூஸ் குடிங்க! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, August 19, 2012

    மூட்டு வலி அதிகமாகுதா? திராட்சை ஜூஸ் குடிங்க!

    -______0____6298

    வயதானவர்கள் மட்டுமல்லாது இளைய தலைமுறையினரையும் மூட்டு வலி வாட்டி வதைக்கிறது. இதற்குக் காரணம் ஓய்வற்ற பணிச்சூழல்தான். 50 வயதிற்கு மேல் வரவேண்டிய மூட்டுவலி பிரச்சினை இன்றைக்கு 30 வயதிற்கு மேலேயே எட்டிப்பார்க்கிறது. இதனை தவிர்க்க வீட்டில் உள்ள பொருட்களைக்கொண்டு நிவாரணம் பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

    குளிர் காலத்தில் மணிக்கட்டு, கை விரல்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மணிக்கட்டு, விரல்களுக்கு அதிகம் வேலை கொடுப்பது, காயம் காரணமாக வலி ஏற்படலாம். சாதாரண மூட்டு பிரச்னைகூட பனிக்காலத்தில் அதிகரிக்கும். வலிகளையும் ஏற்படுத்தும். அதற்கான பாதுகாப்பு முறை மூலம் பனிக்கால மூட்டு வலியை தவிர்க்க முடியும்.

    கால்களில் தசைப்பிடிப்பு, தசைகள் எலும்புகளு டன் இணையும் பகுதிகளில் தொடு வலி, தலைவலி மற்றும் இடுப்பு வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகளவில் வருகிறது. ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. இவர்கள் அதிக பதற்றத்தை விட்டு வேலைகளை நிதானமாக செய்யலாம். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதை தவிர்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்ற பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம். வயிற்று தசைகளுக்கு அவ்வப்போது பயிற்சி கொடுக்கலாம்.

    பனிக்காலத்தில் உடலின் சூடு குறைவதால் ரத்தம் உறையும் பிரச்னை இருக்கும். இதனால் மூட்டு, குதிகால் மற்றும் முதுகுத்தண்டு ஆகியவற்றில் வலி ஏற்படும். குளிரில் காலுக்கு ரத்த ஓட்டம் குறைவதாலும் குதிகால் வலி ஏற்படும். மூட்டுவலியை குறைக்க நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள் ளிட்ட காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் கட்டாயம் ஒரு பழம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கால் பகுதியை கதகதப்பாக வைத்துக் கொண்டால் ரத்தம் உறைவதால் ஏற்படும் வலியைத் தடுக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தாலும் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். தாகத்தை குறைப்பதற்கு குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவேண்டும் கீரை வகை கள், பேரீச்சை, பால் மற்றும் பால் பொ ருட்கள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், மீன் மற்றும் முழு தானியங்கள் சாப்பிடுவதன் மூலம் மூட்டுவலி பிரச்சினையை தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

    திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.
    சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.

    முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.

    குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும். குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மூட்டு வலி அதிகமாகுதா? திராட்சை ஜூஸ் குடிங்க! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top