உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க! - தமிழர்களின் சிந்தனை களம் உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, August 29, 2012

    உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க!

    உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க!
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/Excess_human_adipose_tissue.jpg/220px-Excess_human_adipose_tissue.jpg
    தொப்பை உள்ளவர்களுக்கு திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சராசரி எடை இருப்பவர்களுக்கும் கூட தொப்பை ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    உண்ணும் உணவானது உடல்முழுவதும் சீராக பரவினால் தப்பில்லை. ஆனால் ஒரே இடத்தில் வயிற்றுப் பகுதியில் மொத்தமாக தேங்கிவிடுவதால் சிக்கல் ஏற்படுகிறது.

    வயிறும், இடுப்பும் சுற்றளவு அதிகமாக, அதிகமாக மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். எனவேதான் உடல் எடையை குறைக்க காட்டும் அக்கறையை தொப்பையை குறைக்கவும் காட்டுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

    வயிறு கொழுப்பு அதிகமாவதால் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் சுரப்பின் அளவு குறைகிறது. பெண்மைத் தன்மைக்கான ஹார்மோன் சுரப்பு குறைவதால் முகத்தில் முடி முளைக்கிறது. மலட்டுத்தன்மை, பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தொப்பை அதிகம் உள்ளவர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்குக் காரணம் கெட்ட கொழுப்புகள் அதிகமாக படிவதே காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. இது குறித்து National Health and Nutrition Examination Survey (NHANES III) ஆய்வாளர்கள் 12 ஆயிரத்து 785 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

    அந்த ஆய்வின் படி ஆண்,பெண்களில் பி.எம்.ஐ ரிப்போர்ட்படி தொப்பை இருந்த 2,562 பேருக்கு திடீர் மரணங்கள் ஏற்பட்டது தெரியவந்தது. அதேபோல் 1,138 பேருக்கு இதயம் தொடர்பான நோய் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. சராசரி எடையோடு இருப்பவர்களைக் காட்டிலும் வயிற்றில் கொழுப்பு அதிகம் சேர்ந்தால் 2.75 சதவிகிதம் அளவிற்கு ஆபத்து அதிகம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    எனவே உடல்பருமனை குறைக்கும் அதே நேரத்தில் வயிற்றில் தொப்பையை குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top