சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) - தமிழர்களின் சிந்தனை களம் சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Sunday, July 14, 2013

  சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்)

  இந்தப் பதிவில் கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள சந்தான கரணி என்னும் மூலிகையைப் பற்றிய பதிவே இது.
  சஞ்சீவி வனம்
  வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் “தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற மலைகளில் இருக்கும்,அந்த ஔஷதங்களை அனுமன் கொண்டு வரட்டும்.“என்று சொல்வார்.
  அதையே கம்ப ராமாயணத்தில் அனுமனுக்கு அங்கதன் “அனுமனே சில மூலிகைகளை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வா!முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.“என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
  இப்படி அனுமார் கொண்டு வந்து, திரும்ப தமிழ் நாட்டின் வழியே கொண்டு வரும்போது விழுந்த துண்டுகள்தான் பல மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன என்று செவி வழிக் கதைகள் கூறுகின்றன.இவை மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் காணப்படுகின்றன.பதிவின் மேல் பகுதியில் உள்ள படம் சதுரகிரியில் உள்ள முலிகைகள் அடர்ந்துள்ள சஞ்சீவி வனம் என்பதாகும்.
  அதற்கான கம்ப ராமாயண முழுப் பாடல் நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு வரி, நமக்குத் தேவையான வரி மட்டும் ஞாபகத்தில் உள்ளது.அது“எலும்புகள் சந்துர புல்லுவதொன்று “.
  அதாவது சந்தான கரணி என்ற மூலிகை போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை (எலும்பையும் சேர்த்து)ஒட்டுவித்துச் சேர்ப்பது என்பதே இதன் பொருள் .
  அந்த சந்தான கரணி என்ற மூலிகைப் பொடியை ஒரு ரீபில் இல்லாத பேனாவில் அடைத்து திரு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன், அனைவரின் உபயோகத்திற்காக கொடுத்து வருகிறார்.அவர் பொருளை அதிகம் விரும்பாத நபர் .அந்தப் பேனாவின் படம்
  இந்தப் பொடியை இரத்த உறைவுப் பொடி என்ற பெயரில் அவர் சந்தைப் படுத்தி வருகிறார்.இந்த பொடியை இரத்த உறையாத தன்மை உள்ள ஹீமோபிலியா என்ற வியாதி உள்ளவர்கள் பயன் படுத்திப் பார்த்து நல்ல பலன் கிடைத்துள்ளது.
  பொருளில்லாத பலருக்கு இலவசமாகவே வைத்தியம் பார்த்து அனுப்புவார்.நான் எழுதும் கட்டுரைகளைக் கூட அவர் பார்க்கும் அளவுக்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாதவர்.அவரது மூலிகைப் பொருட்கள் பல தரமானதாக இருந்தாலும்,அபூர்வமான மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்டு இருந்தாலும், வியாபார ரீதியாக சிந்திக்கத் தெரியாத நபராக இருப்பதால் அவரிடம் இந்தப் பொருட்களை வாங்கிச் சென்று மேல்விலை வைத்து விற்பதனால் பலர் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.
  நமது வலை வாசக அன்பர்களுக்கு இடைத்தரகு இல்லாமல் மிக,மிக குறைந்த விலைக்கு கிடைக்கட்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் இது போன்ற பல மூலிகைகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். மேலும் திரு கண்ணன் அவருக்கு ஒரு நாளில் கிடைக்கும் குறிப்பிட்ட வரும்படியை சதுரகிரி அன்னதானத்திற்கு அரிசி வாங்கிக் கொடுக்க செலவிட்டு வருகிறார்.இத்தனை தயாள குணமும் அவரது கள்ளம் கபடமற்ற தன்மையும் என்னை அவரிடம் அன்பு கொள்ள வைத்தது.மற்றபடி இதில் எந்த வியாபார நோக்கமும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

  மேலும் அவரது தொடர்பு எண்ணை நான் வலையில் தெரிவித்து இருப்பது வாசகர்களின் நன்மைக்காகவே.அவரிடம் என் அலைபேசி எண்ணைக் கேட்க வேண்டாம். விரைவில் எனது அலைபேசி எண் (குறிப்பிட்ட நேரத்தில் பேசுவதற்காக மட்டும்) விரைவில் வெளியிடப்படும்.அவசியமான சந்தேகங்களை மட்டும் கேட்டு தெளிந்து கொள்ளுங்கள்.அந்த நேரம் மற்ற வாசகர்களும் தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என்பதால் கேள்விகளை சிக்கனமாக குறித்து வைத்து கேட்கவும் .
  இதை அப்படியே ஹோமியோ முறையில் மருந்தாக்கி உள்ளுக்கும் கொடுத்து வருகிறார் எனது சீடரான திரு தமிழ வேள் அவர்கள்.அந்த மருந்து ஹீமோபிலியா என்ற வியாதி உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளித்து குணமாக்கியுள்ளது.

  கீழ்க் கண்ட ஒளிக் காட்சி இணைப்பில் தோன்றுபவர் திரு ரவிக் குமார். இவர் தேனீயில் இருக்கிறார். இவர் சதுர கிரி ஹெர்பல்ஸ் கண்ணனிடம் மூலிகைகளை வாங்கி சந்தைப் படுத்துபவர்.
  சந்தான கரணி என்ற மூலிகையின் செயல்பாடு பற்றிய யூ டியூப் ஒலிக்காட்சி இணைப்பு.
  மேலும் இந்த மூலிகை வெட்டுக் காயங்களுக்கும், தீச்சுட்ட புண்களுக்கும்,சர்க்கரை வியாதியில் வரும் புண்களுக்கும்,சர்க்கரை வியாதியஸ்தருக்கு ஏற்படும் காயங்களுக்கும்,படுக்கைப் புண்களுக்கும், சைலன்சர் சுட்ட புண்ணுக்கும், ராஜ பிளவைக்கும் உபயோகிக்கலாம். புண்ணில் போட்டவுடன் சற்று எரிச்சலுடன் குணமளிக்க ஆரம்பித்துவிடும்.பல மாதங்களாக ஆறாத புண்களையும் இதே மூலிகை குணமளித்துள்ளது.
  இதைவிட சக்தி குறைந்த மூலிகைகள் பல உள்ளன.அவையாவன கிரந்தி நாயகம், சிறுகண் பீழை, சதையொட்டி,தாத்தாச் செடி என்றழைக்கப்படும் கிணற்றுப் பாசான்,வெள்ளைக் கரிசலாங் கண்ணி, குப்பை மேனி ,சிறு செருப்படை,பொடுதலை ஆகியனவாகும்.
  -மச்சமுனி-
  • Blogger Comments
  • Facebook Comments

  1 comments:

  Item Reviewed: சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top