முருங்கையின் மருத்துவ மகிமை... - தமிழர்களின் சிந்தனை களம் முருங்கையின் மருத்துவ மகிமை... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, July 3, 2013

    முருங்கையின் மருத்துவ மகிமை...

    முருங்கையின் மருத்துவ மகிமை...
    ----------------------------------------------------

     
     பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

    முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது.

    முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.

    முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும்.

    முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

    இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.

    தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

    முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

    கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

    ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

    முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்,

    முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது, புரதம் – 6.7%, கொழுப்பு – 1.7%, தாதுக்கள் – 2.3% மற்றும் கார்போஹைட்ரேட்கள் – 12.5%.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: முருங்கையின் மருத்துவ மகிமை... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top