சிந்திக்க சில விஷயம் - தமிழர்களின் சிந்தனை களம் சிந்திக்க சில விஷயம் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, December 14, 2010

    சிந்திக்க சில விஷயம்

    m
    மனிதன் & பிரபஞ்சத்தின் மிக சிறந்த கோமாளி
    மனிதனின்அடிப்படை தேவைகள்&உணவு, உடை, இருப்பிடம்
    (1) உணவு:பழங்களூம் கொட்டைபருப்புகளும்
    (2) உடை: உண்பதுநாழி, உடுப்பது இரண்டே.
    எனவே 2 உடைகள் போதுமானது. பருத்தி செடியில் இருந்து அதற்கு தேவையான பஞ்சைபெற்றுக் கொள்ளலாம். அதை இராட்டையின்மூலம் உடையாக்கிக் கொள்ளலாம். பெரிய பெரியஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையிருக்காது. துணிகளுக்கு சாயம் ஏற்றுவதால்ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்கலாம்.
    (3) இருப்பிடம்:சிறு சிறு மண் வீடுகளும், பனை, தென்னை ஓலைகள்வேய்ந்த குடிசைகளுமே போதுமானது. (பூகம்பங்கள் பெரிய கட்டிடங்கள் மற்றும் பெரிய அணைகளாலேயே உருவாகிறது. மனிதன் பூகம்பத்தை விட பூகம்பத்தினால் ஏற்படும் கட்டிட இடிபாடுகளில்சிக்கியே இறக்கிறான்.

    மேற்கண்ட மூன்றுக்கும் நாம் இயற்கையை மாசுபடுத்த வேண்டியதில்லை. இயற்கை சுழற்சிசமநிலையில் இருக்கும். விஷங்களை கக்கும் தொழிற்சாலைகள் தேவையில்லை. இவையே மனிதனின் தேவைக்கானவை. மற்றவை மனிதனின் பேராசைக்கானவை. நமது பேராசையே நம்மை ஆயுதங்கள்,பஞ்சம், வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், சூறாவளி மூலமாக நம்மை அழிக்கிறது.

    ஆவதும் அவனாலே(டெஸ்ட்யுப், க்ளோனிங்)

    அழிவதும் அவனாலே(ஆயுதங்கள்) என்ற நிலைக்குவந்து விட்டான். அவன் ஒரே சமயத்தில்முட்டாளாகவும் அறிவாளியாகவும் இருந்துவருகிறான். எனவே நமக்கு நாமே பிரபஞ்சத்தின்மிகச் சிறந்த கோமாளி& மனிதன் என பட்டம் சூட்டிக் கொள்ளலாம். வேறு எந்த உயிரினமும் நம்மோடு இந்த விஷயத்தில் போட்டி போட முடியாது.

    இந்த உலகத்தின் கடைசி மரம் வெட்டப்படும் முன்பணத்தை சாப்பிட, சுவாசிக்க முடியாது என்பதை மனிதன் உணருவானா?






    நன்றி -லோகநாதன்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: சிந்திக்க சில விஷயம் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top