நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…! - தமிழர்களின் சிந்தனை களம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, October 28, 2013

    நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…!

    நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…!

    நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

    நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகஇருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.

    நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம்விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும்பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

    நீரழிவு நோயை தடுக்கும்:

    நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குகிடைக்கவும் பயன்படுகிறது.குறிப் பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

    நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கல் உருவா வதைத் தடுக்க முடி யும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இதயம் காக்கும்:

    நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

    இளமையை பராமரிக்கும்

    இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில்பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

    ஞாபக சக்தி அதிகரிக்கும்:

    நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும்பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

    மன அழுத்தம் போக்கும்:

    நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம்நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்றமூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்துசாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

    கொழுப்பை குறைக்கும்:

    தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான்உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்றுநம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானதுநமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும்கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

    இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும்கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

    உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலைஅதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில்குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலைஉண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கானமருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம்நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும்நிலக்கடலை
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top