முதுகுவலிக்கு ஓமியோபதியில் தீர்வு - தமிழர்களின் சிந்தனை களம் முதுகுவலிக்கு ஓமியோபதியில் தீர்வு - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Monday, October 28, 2013

  முதுகுவலிக்கு ஓமியோபதியில் தீர்வு


  முதுகுவலிக்கு ஓமியோபதியில் தீர்வு

  மனிதனுடைய அன்றாட வாழ்க்கையின் எல்லா இயக்கங்களும் முதுகெலும்பை சார்ந்தே இருப்பதால் முதுகெலும்புக்கு அதிகமான வேலைப் பளுவாகிறது. இதனால் முதுகெலும்பின் மேற்பகுதியும் கீழ்பகுதியும் பலவீனமான பகுதியாகிறது. முதுகுவலியால் 80% மக்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் பாதிக்கப்படாமல் இருந்ததில்லை. இதில் 70% மக்களுக்கு ஓய்வு, உடற்பயிற்சியின் மூலமே சரியாகிவிடும். மீதமுள்ள 30% பேருக்கே மருத்துவரின் பரிந்துரைகள் தேவைப்படுகிறது.

  முதுகுவலிக்கான காரணத்தை இருபெரும் பகுதிகளாக நாம் பிரிக்கலாம். முதல் பகுதியில் காரணத்தை ஆராய்ந்தால் நம்முடைய வாழ்க்கை முறைகளே முதுகுவலிக்கு அதிகப்படியான காரணமாகிறது. தொடர்ந்து நீண்டநேரம் குனிந்து உட்கார்ந்து தொலைக்காட்சி பார்ப்பது, கம்ப்யூட்டர் முன் அமர்வது போன்றவையும், உடற்பயிற்சின்மையும், உயரத்திற்கு பொருந்தாத எடையும், அதிகப்படியான எடை தூக்குவதும், தவறான நிலையில் நீண்ட நேரம் நிற்பதும், அதிகமாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சரியான முறையில் உட்காராமல் நீண்ட நேரம் பயணிப்பதும், முதுகுதண்டு குனிந்தபடி அதிக நேரம் வேலை செய்வதும், தகுந்த மெத்தை, இருக்கை இவைகளை பயன்படுத்தாததும் முக்கிய காரணமாகும். 

  இவைகளைச் சரியாக கடைப்பிடித்தாலே 75% நோயாளிகளுக்கு முதுகுவலி சரியாகிவிடும். இவைகளை கடைபிடித்தும், ஓய்வு, உடற்பயிற்சி எடுத்தும் முதுகுவலி சரியாகவில்லையெனில் மருத்துவரை நோயாளிகள் உடன் தாமதிக்காமல் அணுக வேண்டும். இதில்லாமல், பிறவிக்கோளாறு, முதுகுத்தண்டில் அடிபடுதல், டிஸ்க் விலகல், முதுகு தசை பிடிப்பு, முதுகுத்தண்டில் கட்டிகள், எலும்பு தேய்மானம், சிறுநீரகம், குடல் பகுதிகளில் ஏற்படும் நோய்களாலும் வலி வரலாம்.

  காசநோய் போன்ற கிருமிகளின் தொற்றால் முதுகெலும்பு பாதிக்கப்பட்டும் முதுகுவலி உருவாகிறது. இம்மாதிரியான நோயாளிகளுக்கு அடிக்கடி காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ உடன் இருக்கும். தண்டுவடத்தில் கட்டியோ, நரம்பில் வீக்கமோ, புற்றுநோய் பாதிப்பாலோ கூட முதுகுவலி வரலாம். புற்றுநோயை பொறுத்தவரையில் தைராய்டு, சிறுநீரகம் புராஸ்டேட், மார்பகம், நுரையீரல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றநோய் பிற்காலத்தில் முதுகின் தண்டுவடத்தையும் பாதிக்கிறது.

  முதுகெலும்பு அதனுடைய பலத்தை இழந்து சிறுசிறு துகள்களாக உடைந்து போவதை ஆஸ்டியோஸ்போரோசிஸ் என்கிறோம். இது கால்சியம் சத்து குறைவினாலும், ஹார்மோன் பாதிப்பாலும், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்பும், கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்கள் தொடர் சிகிச்சை எடுக்காததாலும் உருவாகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: முதுகுவலிக்கு ஓமியோபதியில் தீர்வு Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top