நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக சாப்பிடலாம்! - தமிழர்களின் சிந்தனை களம் நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக சாப்பிடலாம்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, October 24, 2013

    நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக சாப்பிடலாம்!

    நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக சாப்பிடலாம்!


    தமிழில் சீனி துளசி என்றழைக்கப்படும் "ஸ்டீவியா ரியோடியானா' ஒரு மருத்துவ செடி. இச்செடி சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இச்செடியில் இருந்து எடுக்கப்படும் "ஸ்டீவியோ சைட்' மற்றும் "ரிபோடிசைட்' சர்
    க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது. ஸ்டீவியா கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிகமாக இனிப்புத்தன்மையை கொண்டிருந்தாலும் மிக குறைந்த சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த பொருட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது.

    லத்தீன் அமெரிக்க நாடான பராகுவேயில் ஸ்டீவியா இச்செடி அதிகமாக உள்ளது. அங்கு இவ்விலைகளை பொடிசெய்து சீனிக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.


    இதன் மருத்துவ பலன்கள்: நீரிழிவு நோய்க்கு பயன்படும் இயற்கை சர்க்கரை. மிக குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சர்க்கரை உணவு. உணவு பொருட்களில் சேர்க்கப்படும் இயற்கை சர்க்கரை சுவை. ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை சீராக்கும். அழகு சாதன பொருட்களில் ஸ்டீவியா பயன் படுகிறது. சரும நோய்களை தீர்க்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. இருதய நோய் தொடர்புடைய மருந்துகளில் ஸ்டீவியா உள்ளது. குளிர்பானங்களில் பயன்படுகிறது.


    இத்தகைய சீனித்துளசியை தற்போது இந்தியாவில் பயிரிட மத்திய வேளாந்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக விவசாயிகள் சீனித்துளசியை விவசாய நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் குறைந்த செலவில் வளர்க்கலாம். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. உவர்ப்பு தன்மை தாங்கி வளரும் தன்மை இல்லாததால், தண்ணீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களில், போதிய வடிகால் வசதி இல்லாத நிலங்களில் இச்செடியை சாகுபடி செய்ய முடியாது. சீனித்துளசியை அதிகமாக நோய் மற்றும் பூச்சிகள் தாக்குவது கிடையாது.
    சீனித்துளசியை நாட்டி செய்த 4,5 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். அடுத்தடுத்த அறுவடைகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை என்று 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்து லாபம் பெறலாம். அறுவடையின்போது அடிபாகத்திலிருந்து 10 செ.மீ. உயரம் வரை விட்டுவிட்டு மேல்பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். இதன் பிறகு வரும் இலைகள் 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஏக்கருக்கு ஒரு அறுவடையில் 1 முதல் 1.2 டன்கள் வரை உலர் இலைகளை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 4.48 டன் வரை உலர் இலைகள் கிடைக்கும்.


    விற்பனை வாய்ப்புகள்: சீனித்துளசி முதல் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், அடுத்த ஆண்டுகளில் குறைந்த செலவில் ரூ.2 லட்சம் வரையும் வருமானத்தை பெற்றுத்தரும். சீனித்துளசி இலைகளை உலர வைத்து பொடி செய்து இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், ஊறுகாய்கள், ஜாம் ஆகிய பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வு சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நீரிழிவு நோயாளிகளும் இனிப்பாக சாப்பிடலாம்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top