பூக்களின் மருத்துவப் பயன்கள்..! - தமிழர்களின் சிந்தனை களம் பூக்களின் மருத்துவப் பயன்கள்..! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Thursday, October 31, 2013

  பூக்களின் மருத்துவப் பயன்கள்..!

  பூக்களின் மருத்துவப் பயன்கள்..!

  மணம் தரும் மலர்கள் மங்கையர் சூடுவதற்கு மல்ல அவை மருத்துவ குணமும் கொண்டுள்ளன. நாம் அன்றாடம் காணும் மலர்கள் தவிர்த்து பல வித மருத்துவ மலர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

  வெட்பாலைப் பூக்கள்

  வெட்பாலை என்பது ஒரு குறுமரம் 10 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பூ மல்லி போல கொத்து கொத்தாக காய்க்கும். வெட்பாலை பூக்களுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு செய்து உண்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப் புண் ஆறும்.

  புங்கைப்பூ

  நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புங்கைப்பூக்கள் நன் மருந்தாகும். ஒரு கைப்பிடியளவு புங்கைப்பூக்களை எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்து பொடி செய்து தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

  காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் பொடியை வாயில் போட்டு பசும்பால் குடிக்கவேண்டும். தண்ணீரோடும் இந்த பொடியை உட்கொள்ளலாம்.

  48 நாட்கள் தொடர்ந்து அருந்தி வர நீரிழிவு நோய் கட்டுப்படும். மேக நோய் உள்ளவர்கள் புங்கைப்பூ பொடியை குடித்து வந்தால் 20 வகையான மேகநோய்களும் நீங்கும்.

  சிற்றகத்திப்பூக்கள்

  சிற்றகத்தி என்பது அகத்தியில் ஒருவகைப்பூ இதனை செம்பை என்றும் அழைப்பார்கள். கறுப்பு நிறத்தில் பூ பூப்பதை கருஞ் செம்பை என்றும், மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை மஞ்சள் செம்பை என்றும் வழங்குவர்.

  எந்த நிறத்தில் பூப்பதாக இருந்தாலும் அவரவர் ஊர்களில் கிடைக்கின்ற பூக்களைக் கொண்டு மருந்தாக தயாரித்து உண்ணலாம்.

  சிற்கத்திப்பூக்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலை முழுகி வர தலைப்பாரம், மூக்கில் நீர் பாய்தல் முதலியன குணமாகும். தலைக்கு சாதாரணமாக தேய்த்து வந்தாலும் தலைப்பாரம் நீங்கும்.

  பனம்பூ

  ஆண் பனை பாளையை உற்பத்தி செய்கிறது. பாளை மீது பூக்கள் ஒட்டியிருக்கும். அதைத்தான் பனம் பூ என்கிறோம். பல்வலி இருக்கும் போது இளம் பாளையில் உள்ள பனம்பூவை எடுத்துப் பிழிந்து 300 மி.லி சாறு எடுத்து அத்துடன் 100 மி.லி எலுமிச்சை சாறும், 2 கிராம் உப்பும் சேர்த்து வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.

  மகிழம் பூ

  மகிழம் பூவை சுத்தம் செய்து முகர்ந்தால் சுவையின்மை நீங்கும். 50 கிராம் மகிழம்பூ எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகினால் உடலுக்கு வலிமை ஏற்படும்.

  பித்தத்தை தணிக்கும், ஆண்மை கிடைக்கும். மகிழம் பூவை உலர்த்தி பொடி செய்து முகர்ந்தால் மூக்கில் நீர் பாய்ந்து தலைவலியைப் போக்கும்.

  கணைச்சூடு இருப்பவர்கள், மகிழம்பூவை ஊற வைத்து அதன் நீரை பருகினால் கணைச்சூடு நீங்கும். இரைப்பு நீங்க மகிழம் பூவின் சாறு பருகவேண்டும். மகிழம்பூவை அரைத்துச் சாறு எடுத்து அரை டம்ளர் அளவு சாப்பிட மலக்கட்டு நீங்கும்.

  சம்பங்கிப்பூக்கள்

  சம்பங்கிப்பூக்கள் ஐந்து எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு அரை மணிநேரம் ஊறவைத்து அதிலிருந்து பூக்களை எடுத்து விடவேண்டும்.

  அந்த நீரை காலை, பகல், மாலை என மூன்று வேளை சாப்பிட அஜீரணம், செரிமானக் கோளாறு போன்றவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.

  எலுமிச்சைப் பூக்கள்

  எலுமிச்சைப் பூக்களை மைபோல அரைத்து தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பருகிவர பல் ஈறு நோய், பல்வலி குணமடையும்.

  களாப்பூ

  களா என்பது காடுகளிலும் வேலி ஓரங்களிலும் காணப்படும் ஒரு முட் செடி. இதனுடைய பூச்சாறு கண் நோய்களுக்குக் கூறப்பட்ட மருந்துகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

  கண்களில் பூ விழுந்து அது முற்றுவதற்கு முன்னால் களாப் பூவைக் கசக்கி பிழிந்து சாறு மூன்று துளி கண்களில் பிழிந்து வர குணமாகும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: பூக்களின் மருத்துவப் பயன்கள்..! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top