ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி - தமிழர்களின் சிந்தனை களம் ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Monday, October 28, 2013

  ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி

  ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி

  முதுகுவலியை பொறுத்தவரையில் மேற்கூறிய காரணங்களை விட அதிகமாக ஜவ்வு விலகல் காரணத்தால் வருகிறது. இரு முதுகெலும்புக்கு இடையே உள்ள பகுதியை டிஸ்க் எனவும் அதன் நடுவில் ஸ்பைனல் கேனல் வழியாக நரம்புத்தண்டுவடம் செல்வதையும் இந்த பகுதிதான் நாம் குனிந்து நிமிர்வதற்கு வசதியாக செயல்படுகிறது. 

  சாதாரணமாக இடுப்பில் துவங்கி நரம்பு செல்லும் பகுதிகளான தொடை, கெண்டைகால், பாதம் வரை வலி பரவும் அழுத்தம் அதிகரிக்கையில் வலியுடன் கால் மரத்துப்போகும். இன்னும் அழுத்தம் அதிகமாகும்பொழுது கால் நடக்கும்பொழுது பஞ்சின் மேல் வைத்தது போலாகும். இது அதிகமாகும்போது கால் செயலிழக்கவும் அருகிலுள்ள சிறுநீரக, மலம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நரம்பை பாதிக்கவும் வாய்ப்பு உள்ளதாகிறது.

  முதுகுவலி வந்தவுடன் ஓய்வு எடுத்தும், வலி நிவாரண மாத்திரைகள் எடுத்தபின்பும் வலி குறையாவிட்டால் தாமதமின்றி மருத்துவரை உடன் அணுக வேண்டும். எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, ஓய்வு, இடுப்பில் பாரம் கட்டி இழுத்தல் போன்ற பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டும் நிவாரணம் கிடைக்காவிட்டால் ஸ்கேன் செய்வது அவசியம்.

  முதுகுவலி வந்தவுடன் பரிசோதனையில் எந்தவித தொந்தரவும் இல்லை எனில் உடல் எடையை சரிசெய்வது, உட்காரும் விதம், எடைதூக்கும் விதம் இவற்றிலே கவனம் செலுத்தினாலே சரியாகி விடும். முதுகுவலி உள்ளவர்கள் சமமான தளத்தில் படுப்பதும், கூன்விழாமல் நிமிர்ந்து உட்காருவதும், திடீரென முன்புறமாக குனிவது, குனிந்து எடை அதிகமாக தூக்குவது, திடீரென பக்கவாட்டில் திரும்புவது போன்றவற்றை தவிர்ப்பதும் எடை தூக்கும்பொழுது முதுகெலும்பு மடங்காமல் நிமிர்ந்தபடியே முழங்காலை மடக்கி சிறிய பளுவை தூக்குவதும், மிக்க பலனளிக்கும்.

  முதுகுவலி உள்ளவர்கள் முதுகு தண்டிற்கு அதிகமான அழுத்தம் கொடுக்கும் உடற்பயிற்சியை தவிர்த்து நடப்பது, நீந்துவது போன்ற உடற்பயிற்சி மேற்கொள்வது நலமுடையது. ஆகாரத்தில் கால்சியம், புரத சத்துக்கள் சேர்ப்பது ஆஸ்டியோஸ்போரோசிஸ் நோயாளிக்கு பயனளிக்கும். இதனுடன் தகுந்த ஓமியோபதி மருந்தை உட்கொள்ளும்பொழுது 90% அறுவை சிகிச்சையை தவிர்த்து மருந்தின் மூலமே நிரந்தர குணமளிக்க இயலும்.

  அதிகமான வயதின் பாதிப்பாலோ, அதிகமான பாரத்தை தூக்குவதாலோ மிக அதிகமான உள் அழுத்தம் உருவாவதால் இந்த ஜவ்வானது பின்னோக்கி நகர்கிறது. இது சிறிது சிறிதாக பின்னோக்கி சென்று நரம்புத்தண்டை அழுத்துகிறது. இதனால் எந்த இடத்தில் நரம்பு அழுத்தப்படுகிறதோ அந்த நரம்பு செல்லும் இடம் முழுவதும் வலி ஏற்படுகிறது. இந்த நிலையை �டிஸ்க் புரோலேப்ஸ்என்கிறோம்.

  இந்த நோயே 75% முதுகுவலிக்கு காரணமாக அமைகிறது. இது சாதாரணமாக குனிந்து நிமிரும்போதும், திடீரென அதிக பாரத்துடன் நிமிரும்போதும் ஜவ்வானது சிறிது சிறிதாக விலகி பின்னுக்கு சென்று நரம்பு தண்டுவடத்தை பாதிக்கிறது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top