பூண்டு - இஞ்சி - மருத்துவ குணங்கள்.... - தமிழர்களின் சிந்தனை களம் பூண்டு - இஞ்சி - மருத்துவ குணங்கள்.... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, February 13, 2014

    பூண்டு - இஞ்சி - மருத்துவ குணங்கள்....

    பூண்டு,இஞ்சி



    இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகா¢க்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளைஅழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.

    மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

    பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

    ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.

    பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீ¡¢ல் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்)

    இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல், பொ¡¢யலில் சேர்த்து பயன் பெறலாமே. அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.

    வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
    உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும்.

    இதய அடைப்பை நீக்கும்

    இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.

    இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.

    நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.

    மலோ¢யா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

    தாய்ப்பால் சுரக்கும்

    மாதவிலக்குக் கோளாறுகளை சா¢ செய்கிறது .

    சளித்தொல்லை நீங்க:

    1. வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும்.

    2. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.

    3. மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோலூ¢க்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.

    காது அடைப்பு, வலி நீங்க:

    நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட வேண்டும்.

    குறிப்பு: பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எ¡¢ச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பூண்டு - இஞ்சி - மருத்துவ குணங்கள்.... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top