சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுபீளை... - தமிழர்களின் சிந்தனை களம் சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுபீளை... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, February 8, 2014

  சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுபீளை...

  முன்ன மாதிரியெல்லாம் இப்ப இல்ல. ஆளாளுக்கு சொகமில்லனு ஆஸ்பத்திரியில போய் 
  படுத்துக்கிடுறாங்க. ரெண்டு, மூணு நாளாயிட்டா... 'ஒடனே ஆபரேஷன்'னு குண்டு போடுறாங்க 
  சில டாக்டருங்க. அவங்கள சொல்றதுக்கு என்ன இருக்கு? எல்லாம் நம்ம கையிலயில்ல 
  இருக்கு! அட, ஆமாங்க... நோயை முத்தவிடாம இந்தப் பாட்டி சொல்ற வைத்தியத்தை செஞ்சுப் 
  பாருங்க. சில நோய் முத்திப் போனாலும் நாஞ்சொல்ற வைத்தியத்தை செஞ்சா... பூரண குணம் 
  கிடைக்கும். முக்கியமா சிறுநீரகக் கல் வியாதிக்கு மருந்து சொல்றேன்...

  சிறுநீரகக் கல் கரைய...

  சிறுபீளைச் செடி 
  (பொங்கல் பூ என்பார்கள்) சமூலத்தை (முழுச் செடி) எடுத்து மையா அரைச்சி, அந்தத் 
  திப்பியை ஒரு கோலிக்குண்டு அளவு எடுத்து வாயில போட்டு தண்ணிய குடிச்சுட்டு 
  வந்தீங்கனா... கல் படிப்படியா கொறைஞ்சி நல்ல குணம் கிடைக்கும்.

  நெருஞ்சி 
  சூரணம் 50 கிராம், கருஞ்சீரகத்தூள் 10 கிராம், நாட்டு சர்க்கரை 60 கிராம் எடுத்து 
  கலந்து வச்சிக்கிடணும். கால் ஸ்பூன் அளவு எடுத்து, தினமும் ஒரு தடவை அத சாப்பிட்டு 
  வந்தா, காலப்போக்குல தண்ணியா கரைஞ்சிரும் சிறுநீரகக் கல். பொதுவாகவே மத்த 
  எல்லாவிதமான வியாதிகளையும் குணப்படுத்தற தன்மை இந்த சூரணத்துக்கு இருக்கறதால... 
  தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டு பாருங்க... கைமேல பலன் கிடைக்கும்.

  வெள்ளரி 
  விதையை பால் சேர்த்து மையா அரைக்கணும். அதுல ஒரு கோலிக்குண்டு அளவு எடுத்து தினமும் 
  சாப்பிட்டு வந்தா... சிறுநீரகக் கல் கரைஞ்சு போயிரும். குணமாகுற வரை இதைச் 
  சாப்பிடலாம்.

  கோவைக்காய் கொடியை (தண்டு) இடிச்சி, கால் டம் ளர் சாறு 
  எடுத்து, ஒரு சிட்டிகை படிகாரத்தை பொரிச்சு, அதுல சேருங்க. இதோட ஒரு சிட்டிகை 
  சுண்ணாம்பு சேர்த்து உள்ளுக்கு கொடுத்தீங்கனா சட்டுனு கல் அடைப்பு நீங்கும், நீர் 
  உடனே இறங்கும். இதை ஒரு அதிரடி வைத்தியம்னுகூட சொல்லலாம்.

  கடைசியா 
  எல்லாத்துக்கும் தெரிஞ்சது வாழைத்தண்டு. இதைச் சாறு எடுத்துக் குடிக்கலாம். 
  அப்பப்போ சமைச்சு சாப்பிட்டு வந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்.

  நத்தைச்சூரி 
  விதையை 10 கிராம் அளவு எடுத்து வறுத்து பொடி செஞ்சு, நீர் விட்டுக் காய்ச்சி 
  வடிகட்டுங்க. அதுல பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தா... கல் 
  அடைப்பு நீங்கும். சிலபேருக்கு சிறுநீரகத்துல சதை அடைப்பும் இருக்கும். 
  அதுக்கும்கூட இதே வைத்தியத்தை செய்யலாம்.

  குறிப்பு: நாஞ்சொல்லியிருக்கற 
  பொருளுங்கள்ல பலதும் உங்க வீட்டுலயே இருக்கும். இல்லாட்டி, நாட்டுமருந்து கடையில 
  கிடைக்கும்.

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t6848-topic#ixzz2skMG6VAT 
  Under Creative Commons License: Attribution
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுபீளை... Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top