பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்...Biscuit eating health hazard: a new study reported in the ... - தமிழர்களின் சிந்தனை களம் பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்...Biscuit eating health hazard: a new study reported in the ... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, February 9, 2014

    பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்...Biscuit eating health hazard: a new study reported in the ...


    குழந்தைகள் சாப்பிடும் முக்கிய உணவு வகைகளில் பாலுக்கு அடுத்தபடியாக பிஸ்கெட் முக்கிய இடத்தை பிடிக்கிறது. மேலும் பெரியவர்களும் சாப்பாட்டுக்கு மாற்று உணவாக பிஸ்கெட்டுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். பிஸ்கெட் சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. குழந்தைகள் உயரமாக வளருவார்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது.
    அது உண்மை இல்லை. பிஸ்கெட்டில் உடல் நலத்துக்கான கேடுகள் மறைந்து இருப்பதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ‘கான்சர்ட்’ என்ற நிறுவனம் சமீபத்தில் 34 பிரபல நிறுவனங்களின் பிஸ்கெட்டுகள் மற்றும் 25 நிறுவனங்கள் தயாரிக்கும் ஊறுகாய் போன்றவற்றை சேகரித்து ஆய்வு நடத்தியது. அவற்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி பிஸ்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ள கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை மற்றும் அமில அளவு சரியான அளவில் உள்ளதா? என ஆய்வு நடத்தப்பட்டது.
    தமிழ்நாடு, ஆந்திரபிர தேசம், கேரளா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 7 மாதங்களாக பிஸ்கெட்டுகள் பரிசோதனை செய்யப்பட்டன.
    இந்த ஆய்வு குறித்து கான்சர்ட் நிறுவனத்தின் இயக்குனர் சந்தனராஜன் கூறியதாவது:–
    கிழங்குமாவு, கிரீம், உப்பு, பால் மற்றும் பேக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலான அளவு சர்க்கரை உள்ளது. மேலும் அவை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்க உடலுக்கு தீமை விளைவிக்கும் ரசாயன கலவைகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன.
    ஆனால் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகளில் ரசாயன கலவை குறைவாக உள்ளது. எனவே, பிஸ்கெட்டுகள் சாப்பிடுவதன் மூலம் உடலில் சக்தி, தெம்பு ஏற்படலாம்.
    மாறாக உடலில் சத்துகள் உருவாகாது. பெரும்பாலான பிஸ்கெட்டுகளில் நார்ச்சத்து, தேன், கால்சியம் போன்றவை இல்லை. ஆனால், பிஸ்கெட் உணவுக்கு மாற்றானது. சுறுசுறுப்பு கொடுக்க கூடியது. பால், தேன் கலந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்கின்றன.
    இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர். புகையிலை பொருட்களை பயன் படுத்துவதால் மட்டும் புற்று நோய் வராது. நாம் சாப்பிடும் உணவு பொருட்களாலும் 30 சதவீதம் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
    ‘‘எலுமிச்சை, மாங்காய், காய்கறி கலவை மற்றும் மீன்’’ ஊறுகாய் வகைகள் பரிசோதனை செய்யப்பட்டன. பெரும்பாலான ஊறுகாய்களில் சோடியம் அதிக அளவில் உள்ளது. பென்ஷோயிக் அமிலமும் அதிக அளவில் சேர்க்கப் பட்டுள்ளது.
    இனிப்பு வகை ஊறுகாய்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. இது நுகர்வோருக்கு இருதய நோய்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும். அதிக உப்பு சத்து சேர்ப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இந்த தகவலை இந்திய நுகர்வோர் சங்க தலைவர் ராஜன் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்...Biscuit eating health hazard: a new study reported in the ... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top