அடிக்கடி உதடு உலர்ந்து விடுகிறதா? - தமிழர்களின் சிந்தனை களம் அடிக்கடி உதடு உலர்ந்து விடுகிறதா? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, February 4, 2014

    அடிக்கடி உதடு உலர்ந்து விடுகிறதா?

    Lips
    அழகு குறிப்புகள்:அடிக்கடி உதடு உலர்ந்து விடுகிறதா?


    40 வயதைக் கடந்த பெண்களுக்கு மட்டுமல்ல இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும்.

    உதடு கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான்.

    இதைப் போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும். இரவு நேரங்களில் வெண்ணையை உதட்டில் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

    கண்ணில் கருவளையமா?

    சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இதுதான் அவர்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

    கழுத்தில் உள்ள கருவளையம் மறைய....

    சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப்போக்க கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசவும். 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்று விடும். சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் நீங்கி மிக அழகாக பளிச்சிடும்.

    காது அழகை பராமரிப்பது எப்படி?

    பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டுகொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும். ஆகவே பெண்மணிகளே, காதை ஜொலிக்கவைப்பதற்கான இந்த யோசனையை கவனமாக கேளுங்கள்.

    உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும். 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும் பேஸ் - பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாகத் தெரியாது.

    இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க...?

    இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணையை தடவ வேண்டும். அதன் பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச் சிக்கிரமே இடுப்புக் காய்ப்புத் தழும்பு நீங்கி விடும்.

    முகத்தைப் பாதுகாக்கும் முறை:-

    ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம், எண்ணெய் சருமம். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளி பெறும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: அடிக்கடி உதடு உலர்ந்து விடுகிறதா? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top