கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்: - தமிழர்களின் சிந்தனை களம் கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்: - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, May 5, 2014

    கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்:

    கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்:


    1.கடும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

    2.வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைப் பவர்கள் ஏசியில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் ஏசியில் இருக்கக் கூடாது.

    3.அய்ஸ் வாட்டர், ஜூஸ் போன்றவற்றை மிகவும் குளிர்ந்த நிலையில் குடிக்கும்போது சளி, தும்மல், இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே, மிதமான குளிர்ச்சியில் இவைகளைக் குடிக்கலாம்.

    4.சுத்தமான தண்ணீர், இளநீர், மிதமான உப்பு சேர்த்த மோர் குடிக்கலாம். தர்பூசணி மற்றும் பழங்கள் சாப்பிடலாம்.

    5.காபி, டீ குடிப்பதையும், டின், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

    6.வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் குழந்தைகளே. அவர்களுக்கு வயிற்றுபோக்கு, அம்மை, வியர்குறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களைக் கண்காணிப்பது பெற்றோரின் கடமை.

    7.குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது, அவர்கள் குடிப்பதற்கு போதுமான தண்ணீர் கொண்டு செல்ல மறக்கக் கூடாது.

    8.வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.

    9.கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் விளையாடக் கூடாது. காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் விளையாடலாம். 10.சத்துகள் மற்றும் ஆக்சிஜனை செல்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது தண்ணீர். சுவாசத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது. உடல் உறுப்புகள் பாதுகாக்கப் படுகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலுக்கு ஆற்றலை தருகிறது. எனவே, இந்த வெயில் காலத்தில் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும்.

    நன்றி :விடுதலை.காம்

    மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t46046-topic#ixzz30pEcWClO 
    Under Creative Commons License: Attribution
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்: Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top