ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பெற்ற பெண்! (Videos, Photos) - தமிழர்களின் சிந்தனை களம் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பெற்ற பெண்! (Videos, Photos) - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, May 17, 2014

  ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பெற்ற பெண்! (Videos, Photos)

  ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளுக்கு தாயாக இருக்கின்ற யுவதி குறித்த சுவாரஷிய பதிவு இது.

  Reduce this image

  இவரின் பெயர் அலெக்சாந்ரா கின். செக் குடியரசைச் சேர்ந்தவர்.

  இவர் முதல் தடவையாக பரிசோதனைக்கு சென்றபோது இரட்டை குழந்தைகளுக்கு தாயாக உள்ளார் என்று வைத்திய நிபுணர்கள் சொன்னார்கள்.

  ஆயினும் இவரது வயிறு மிகவும் பெருத்துப் போனது. இதனால் மீண்டும் வைத்தியர்களிடம் சென்று இருக்கின்றார்.

  மேலும் இரு குழந்தைகள் வயிற்றில் உள்ளன என்று நிபுணர்கள் சொன்னார்கள்.


  ஆனால் வயிறு பெருத்துக் கொண்டே போனது. மீண்டும் வைத்தியர்களிடம் போனார்.

  மேலும் இன்னொரு குழந்தை வயிற்றில் உள்ளது என சொன்னார்கள்.

  மொத்தத்தில் ஐந்து குழந்தைகள்.
  பல மில்லியன்களில் ஒருவருக்கு சாதாரணமாக ஐந்து குழந்தைகள் ஒரே தரத்தில் கர்ப்பம் தரிக்கும்.

  இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

  ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் என்பது செக் நாட்டில் முன்பு இடம்பெற்று இராத புதுமை.

  சிசேரியன் முறையில் நான்கு ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது. 

  வழமையை காட்டிலும் இரு மடங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர் இப்பிரசவத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.

  மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t35217-videos-photos#ixzz31wFi5Ap9 
  Under Creative Commons License: Attribution
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பெற்ற பெண்! (Videos, Photos) Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top