கர்ப்பப்பை நீர்கட்டிகள் ( Uterine Tumors ), மாதவிடாய் பிரச்சினை குணமான சார்ஜா பெண்மணியின் சிறப்பு பேட்டி. - தமிழர்களின் சிந்தனை களம் கர்ப்பப்பை நீர்கட்டிகள் ( Uterine Tumors ), மாதவிடாய் பிரச்சினை குணமான சார்ஜா பெண்மணியின் சிறப்பு பேட்டி. - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Saturday, May 3, 2014

  கர்ப்பப்பை நீர்கட்டிகள் ( Uterine Tumors ), மாதவிடாய் பிரச்சினை குணமான சார்ஜா பெண்மணியின் சிறப்பு பேட்டி.

  UterineFibroids
  நான்கு மாதங்களுக்கு முன் நம் வலைப்பூவின் வாசகர்களில் ஒருவர் சார்ஜாவில் இருந்து இமெயில் மூலம் கர்ப்பப்பை நீர்கட்டிக்கான மருந்து பற்றி கேட்டிருந்தார். மாதவிடாய் பிரச்சினை உள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு இருக்கும் பிரச்சினை தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி, சார்ஜாவில் இருக்கும் அந்த சகோதரியை ஸ்கைப் மூலம் வர சொல்லி முழுமையாக அவரின் பிரச்சினைகள் மற்றும் உணவு பழக்கம் என அனைத்தையும் கேட்டபின், நம் குருநாதர் அகத்தியரின் நூலில் இதற்கு மருந்து இருக்கின்றதா என்று பார்த்த போது குருவின் திருவருளால் மருந்து கிடைத்தது. இயற்கை மருத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் இவருக்கு இமெயில் மூலம் மருந்து தெரியப்படுத்தி இருந்தோம், இந்த மருந்துகளை சார்ஜா செல்லும் அவரின் குடும்ப நண்பர் ஒருவர் மூலம் சித்த மருந்து கடையில் வாங்கி சாப்பிட்டுள்ளார். மருந்து சாப்பிட ஆரம்பித்ததும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவரின் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரியப்படுத்தி கொண்டிருந்தார். சரியாக 28 நாட்களில் முழுமையான குணம் கிடைத்தது. அதன் பின் மருத்துவமனையில் சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப்பை நீர்கட்டி இருந்ததற்கான அறிகுறியேஇல்லாமல் இருந்தது. இரண்டு மாதம் கழித்த பின் இவர் அளித்த பேட்டியை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம்.
  ——————————————————————–
  ஐயா!
  கடந்த 5 வருடங்களாக நான் கர்ப்பப் பை கோளாரினாலும், மாத விடாய் சரியாக வராத காரணத்தாலும் ரெம்பவும் அவதிப் பட்டு வந்தேன். ஸ்கேன் செய்து பார்த்ததில் கர்ப்பப் பையில் நீர் கட்டிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். மாத விடாய் அலோபதி மாத்திரைகள் சாப்பிட்டால் மட்டுமே வரும் என்ற நிலை. இந்த வேளையில் எங்கள் குடும்ப நண்பர் சுல்தான் அவர்கள் மூலமாக இயற்கை உணவு உலகத்தை அணுகி இதற்கான மருந்தினை பெற்றேன். நான் சார்ஜாவில் (துபாய்) இருப்பதால் சுல்தான் அவர்கள் துபாய் (சொந்த வேலையாக) வரும் போது எனக்கான மருந்தினையும் அவரே சித்த மருந்து கடையில் வாங்கி வந்து கொடுத்தார். 28 நாட்கள் சில உணவு பத்தியங்களுடன் தொடர்ந்து சாப்பிட்டேன். நம்ப மாட்டீர்கள்… 28 வது நாள் எனக்கு அலோபதி மருந்து எதும் சாப்பிடாமலேயே மாத விடாய் ஏற்பட்டது. தொடர்ந்து மாதா மாதம் சரியாக வந்து கொண்டிருக்கிறது. நீர்கட்டிகளும் தற்போது ஸ்கேன் செய்து பார்த்ததில் எல்லாமே கரைந்து மாயமாக மறைந்து போனது. 5 வருட கால நோய்க்கு 28 நாட்களில் குணம் கண்டேன். எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. இயற்கை உணவு உலகத்திற்கும் மருந்து வாங்கி கொடுத்த சுல்தான் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகள்.
  குறிப்பு: நான் தற்போது உடல் மெலிய இயற்கை உணவு உலகம் அளித்த மருந்தினை முழு நம்பிக்கையுடன் சாப்பிட்டு வருகிறேன். விரைவில் நல்ல செய்தியுடன் மீண்டும் வருகிறேன்.
  என்றும் நன்றி மறவா,
  ஃபாத்திமா.
  சார்ஜா,
  துபாய்.,
  ———————————————————
  இந்த சகோதரிக்கு மருந்து கொடுத்து குணம் கிடைத்த பின், இதே பிரச்சினை உள்ள சென்னையில் இருக்கும் இரண்டு பெண்மணிகளுக்கும் மருந்து கொடுக்கலாம் என்று ஏற்கனவே மருந்து வாங்கி கொடுத்த நபரிடமே இதையும் கூறி ஐயா வாங்கிக்கொடுக்கலாமா என்று கேட்டோம், மருந்துக்கான கட்டணம் கூட வாங்காமல் அவர் மருந்து வாங்கி கொடுத்து அந்த இரண்டு பெண்மணிகளும் பரிபூரண குணம் அடைந்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்து கொள்கிறோம்.
  மருந்து கேட்பதற்கு முன் உங்களின் முழுத்தகவல்களையும் தெரிவித்து மருந்து கேளுங்கள். கர்ப்பப்பை நீர்கட்டிகான மருந்தை சென்னையில் இருக்கும் மேலே மருந்து வாங்கி கொடுத்த நபரிடம் கொடுக்கலாம் என்று இருக்கிறோம், முழு நம்பிக்கையும் உள்ள நபர்கள் இமெயில் மூலம் தெரியப்படுத்துங்கள்.
  சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் இமெயிலில் பின்வருமாறு கேட்டிருந்தார். “ உங்களிடம் மருந்து கேட்டால் யாரோ ஒருவருடைய போன் நம்பரை கொடுத்திருக்கிறீர்களே” , பிஸினஸ் ஏதும் நடக்கிறதா என்ற எண்ணத்தில் இந்த கேள்வியை கேட்டிருந்தார். இந்த கேள்வி நம் மனதை பெரிதும் பாதித்துவிட்டது. சென்னை மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நபர்கள் தொடர்ந்து மருந்து பொடி எங்கு கிடைக்கும் என்ற கேள்வியை தொடர்ந்து கேட்பதால் தான் 2 வருடமாக தேடிய பின் கிடைத்த நபரை முழுமையாக தெரிந்த பின் தான் அவரின் அலைபேசி எண்ணை தெரியப்படுத்தி இருந்தோம், அவரும் மருந்து பொடியின் விலை ரூ.150 வைக்கலாம் என்ற போது நாம் தான் நமக்காக ஒருவர் கஷ்டப்படக்கூடாது அத்துடன் மருந்தை அடுப்பில் வறுப்பது , திரிப்பது அத்துடன் அவரின் மனித உழைப்பு என எல்லாவற்றுக்கும் சேர்த்து தான் ரூ.200 நிர்ணயித்தோம், சில சித்தமருத்துவ முறைகளை வெளியே சொல்ல அனுமதி இல்லாத காரணத்தினால் நம்ம்பிக்கையான, சிலரின் மனதை முழுமையாக தெரிந்து முகம் தெரியாத சில நபர்களிடம் கூட கொடுத்து செய்து கொடுக்க சொல்கிறோம். சித்தர்களின் சில அரிய காயகல்ப முறைகளையும், சோதிடத்திற்கு மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பு , மிகுதியான பலன்களை கொடுக்கும் தைலமுறைகளைக்கூட நம்பிக்கையான சிலரை வைத்து நம் மக்களுக்கு கொடுக்கலாம் என்று இருந்தோம் ஆனால் மேலே ஒருவர் கேட்ட கேள்வி எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஒரு நோயாளியிடம் பணம் பெற்று கொண்டு மருந்து கொடுப்பது காசுக்காக அவரின் நோயை (கர்மத்தை) விலைக்கு வாங்குவதாகும். இந்த பணத்தை வைத்து கொண்டு என் நோயை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினால் யார் தான் வாங்குவார்கள் ? உலகில் வாழ்வதற்கு பணம் தேவை என்றாலும் எம் குருநாதரின் பேரண்புக்கு முன்னால் இதெல்லாம் தூசு தான்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: கர்ப்பப்பை நீர்கட்டிகள் ( Uterine Tumors ), மாதவிடாய் பிரச்சினை குணமான சார்ஜா பெண்மணியின் சிறப்பு பேட்டி. Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top