கருத்தடை மாத்திரை போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் - தமிழர்களின் சிந்தனை களம் கருத்தடை மாத்திரை போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, May 13, 2014

    கருத்தடை மாத்திரை போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

    கருத்தரிக்காமல் இருப்பதற்கு எத்தனையே கருத்தடை முறைகள் இருந்தாலும், அவை அனைவரும் சரியாக வேலை செய்வதில்லை. ஆனால் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், நிச்சயம் கருத்தரிப்பதை தடுக்கலாம். இத்தகைய கருத்தடை மாத்திரைகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கின்றன. 

    இருப்பினும், இப்படி கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் ஒருசில பக்கவிளைவுகள் ஏற்படும் என்று கேள்விப்பட்டிருப்போம். தற்போது பெரும்பாலான பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு எடுத்து கொள்ளும் ஒன்று தான் கருத்தடை மாத்திரை. 

    இப்படி எடுத்துக் கொள்ளும் போது ஒருசில உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். அதிலும் இவை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக இந்த கருத்தடை மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவதோடு, கருச்சிதைவின் அளவு அதிகரிக்கும். 

    இதனால் நாளடைவில் மலட்டுத்தன்மை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. சரி, இப்போது கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகளைப் பார்ப்போம். 

    கருத்தடை மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், அவை கருத்தரிப்பதை கட்டுப்படுத்தும். ஆனால் அதே சமயம் அது மாதவிடாய் சுழற்சி மற்றும் கருத்தரிக்க முயலும் போது தடையை ஏற்படுத்தும்.

    கருத்தடை மாத்திரையினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் குமட்டல். இப்படி கருத்தடை மாத்திரை எடுத்த பின்னர் குமட்டல் ஏற்பட்டால், அது கர்ப்பத்திற்கான அறிகுறி அல்ல. 

    மாறாக அது கருத்தடை மாத்திரையினால் ஏற்படும் ஒரு பக்க விளைவாகும். கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பின்னர், மாதவிடாய் சுழற்சியின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.

    கருத்தரிக்கக் கூடாது என்று கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டால், கடுமையான தலை வலி ஏற்படும். இப்படி தலை வலி ஏற்படும் போது, அதற்கான மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். 

    கருத்தடை மாத்திரையினால் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அது அவ்வபோது மனநல மாற்றத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, நாளடைவில் காதலுணர்ச்சியை அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்துவிடும். 

    காதல் வாழ்க்கையில் உள்ள நாட்டம் குறையும். இது கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் மற்றொரு பக்க விளைவாகும். அதில் மார்பகங்கள் மென்மையாவதோடு, அதனை தொட்டால் வலி ஏற்படும். 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கருத்தடை மாத்திரை போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top