முகத்தில் மரு, கரும்புள்ளியா? இதோ சில டிப்ஸ்! - தமிழர்களின் சிந்தனை களம் முகத்தில் மரு, கரும்புள்ளியா? இதோ சில டிப்ஸ்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Monday, June 2, 2014

      முகத்தில் மரு, கரும்புள்ளியா? இதோ சில டிப்ஸ்!

      முகத்தில் மரு, கரும்புள்ளியா? இதோ சில டிப்ஸ்!

      பப்பாளி பழத்தின் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக் 
      குணங்கள் நிறைந்தவை. அழகை அழகூட்டும் பப்பாளியைப் பற்றி இன்னும் சில அழகு 
      டிப்ஸ்….

      * தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் ‘ப்ரெஸ்’ ஆக காணப்படுவீர்கள்.

      * தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் 
      அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே 
      எட்டிப்பார்க்காது.

      * தினமும் காலையில் எழுந்ததும் பழங்கள் 
      சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் 
      பழங்கள் சாப்பிடுவது நல்லது.

      * தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

      * கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் 
      எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.

      * தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பரு தொல்லை வராது.

      * 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.

      * 2 டீஸ்பூன் தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

      * பப்பாளி வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை 
      ஊக்குவிக்கிறது, பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை 
      அகற்றுகிறது.

      * பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் 
      புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து 
      தயாரிக்க பயன்படுகிறது.

      * பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

      மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t24927-topic#ixzz33Usb6woT 
      Under Creative Commons License: Attribution
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: முகத்தில் மரு, கரும்புள்ளியா? இதோ சில டிப்ஸ்! Rating: 5 Reviewed By: Unknown