தர்ப்பைப் புல்லும் சர்க்கரை நோயும்! - தமிழர்களின் சிந்தனை களம் தர்ப்பைப் புல்லும் சர்க்கரை நோயும்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Thursday, June 26, 2014

  தர்ப்பைப் புல்லும் சர்க்கரை நோயும்!

  தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாத பித்த கபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பையை ஓர் அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். 

  சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையைக் குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.

  சுமார் 15 கிராம் தர்ப்பைப் புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை சுண்டக் காய்ச்சி குளிர்ந்த பிறகு வடிகட்டி அந்தத் தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகி வர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு ஹிமகஷாயம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப் புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

  தர்ப்பைப் புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப் புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஓர் அற்புதமான பானமாகும்.

  தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது.

  சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றுகிறது.

  சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப் புல்லுக்கு இருக்கிறது.

  தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப் பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.

  மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்த ஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன் மூலமாக ஏற்படும் இரத்த மூலம், இரத்தக் கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.

  நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். ஏங்ழ்ல்ங்ள் க்ஷ்ர்ள்ற்ங்ழ் எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சிக்கு தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.

  இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் வரப்போகும் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்போம்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: தர்ப்பைப் புல்லும் சர்க்கரை நோயும்! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top