பல்வலி போக்கும் நந்தியா வட்டை - தமிழர்களின் சிந்தனை களம் பல்வலி போக்கும் நந்தியா வட்டை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, June 18, 2014

    பல்வலி போக்கும் நந்தியா வட்டை

    அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. 
    பல்வலி போக்கும் நந்தியா வட்டை
    செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: 

    அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம். 

    பார்வை கோளாறு குணமடையும்: 

    இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது. நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும். இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். 

    மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை கட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன் படுகின்றது. இது நிறத்திற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள். நந்தியா வட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும். 

    பல் வலி நீக்கும்: 

    நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்கு, 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பல்வலி போக்கும் நந்தியா வட்டை Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top