பழம்:நம்மில்பலர், உணவருந்தியதும், வாழைப்பழங்கள் உண்பதை, வழக்கமாக்கி வைத்துள்ளோம். அது பற்றிய சிறு தகவல் ஒன்று. பழங்கள் உடல் நலனிற்கு உகந்தவைதான். ஆனால், அவற்றை எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொருத்து, அவை நம் உடல் நலனிற்கு உற்ற துணையாவதும், ஊறு விளைவிப்பதும் நடைபெறும்.
நாம் உணவருந்துவதற்கு, அரை மணி நேரம் முன்பு, பழங்கள் உண்பது, நமது ஜீரண் சக்தியை, நன்கு உயர்த்திட வழிவகுக்கும். மாறாக, உணவு உண்டவுடன், பழங்களை உண்பது, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஏனெனில், பெரும்பாலும், நாம் உண்ணும் உணவைவிட, பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை என்பதால், உணவு உண்டவுடன் பழங்களை உண்ணும்போது, முதலில் ஜீரணமாகும் பழத்துடன், முழுவதும் ஜீரணமாகாத உணவும், ஜீரண மண்டலத்தின் அடுத்த பகுதிக்கு நகர்ந்துவிடும். அதன் காரணமாக, அஜீரணக்கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும்.எனவே, உணவு அருந்துவதற்கு அரை மணி நேரம் முன்பு பழங்கள் உண்பதும்,தவிர்க்க முடியாத தருணங்களில், உணவு உண்ட பின், அரை மணி நேரம் கழித்தோ, பழங்கள் சாப்பிடுவது சாலச் சிறந்தது.
உணவுடன் தண்ணீர்:அதேபோல், உணவு உண்ணும்போது, உணவை, நம் உமிழ்நீருடன் கலந்து, நன்கு சுவைத்து உண்ணவேண்டும். நாம் உண்ணும் உணவு செறித்திட,நம் உடலில் சுரக்கின்ற உமிழ்நீரைப்போல், உற்ற நண்பன் வேறில்லை. உணவு உண்ணும்போது, உணவுடன் சேர்த்து, தண்ணீர் அருந்துதல் கூடாது. உணவு அருந்துவதற்கு அரை மணி நேரத்திற்குள்ளும், உணவு உண்ணும் போதும்,உணவு உண்ட பின், அரை மணி நேரத்திற்குள்ளும், தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பது நலம்.இதனால்,நாம் உண்ணும் உணவு, நம் ஜீரண மண்டலத்தில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் மூலம் நன்றாய் செறித்திட துணை புரியும். உணவு உண்டு அரை மணி நேரம் கழித்து, சிறிது சிறிதாக, தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம், பன்னிரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும்.
இந்த நடைமுறைகளைக் கடை பிடித்துத்தான் பாருங்கள். இதிலுள்ள சூட்சுமம் புரியும்.
thanks:unavuulagam.blogspot.
0 comments:
Post a Comment