காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை - தமிழர்களின் சிந்தனை களம் காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, July 25, 2011

    காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை

    தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கல‌ந்து ‌தினமு‌ம் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.

    தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, கடைந்தோ உண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும்.

    தூதுவளை இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1 தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து வர, எலும்புருக்கிக் காசம், மார்புச் சளி உடனே நீங்கும்.

    தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர மனநலம் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும்.

    தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர, தாது விருத்தி, உடல் பலம், முகவசீகரம் பெறலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top